Tamilnadu Rain: நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கு மக்களே...கவனமாக இருங்க ..!
TN Rain: மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அநேக இடங்களில், அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை:
தமிழ்நாட்டில் நிலவும் வானிலை நிலை குறித்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை மறுநாள் கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு:
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 11, 2024
இன்று இரவு 10 மணிவரை சுமார் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.