TN Rain: கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...! மற்ற பகுதிகளில் நிலவரம் எப்படி..?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பனிமூட்டம் அதிகாலையில் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் திடீரென இரவில் மழையும், அதிகாலையில் பனிமூட்டமும் காணப்படுகிறது. இந்நிலையில், கிழக்கு இசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
08.01.2023 மற்றும் 09.01.2023: தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழ்நாடு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது.
10.01.2023 மற்றும் 12.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) January 8, 2023
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) January 8, 2023
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்); பரங்கிப்பேட்டை (கடலூர்) 3, சிதம்பரம் AWS (கடலூர்), சிதம்பரம் (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்) தலா 1.
updated pic.twitter.com/H7LBv5U03o
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) January 8, 2023
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்’ - அமைச்சர் சக்கரபாணி