TN Headlines: சி.பி.சி.எல். நிறுவனத்தில் தீ விபத்து! ஆளுநரை விமர்சித்த முதலமைச்சர்! இன்று இதுவரை நடந்தது இதுதான்!
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.சு
சென்னையை அடுத்த மணலி அருகே அமைந்துள்ளது சி.பி.சி.எல். நிறுவனம். இந்த நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் கடலில் படர்ந்து கடல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இன்று அந்த நிறுவனத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் பாதுகாப்பாக உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் படிக்க: Fire Accident: மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் தீ விபத்து: விண்ணை முட்டும் கரும்புகை...சென்னையில் பரபரப்பு!
சத்தீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மிசோரம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் தவிர மற்ற 3 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில், இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் அடுத்தாண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க: CM Stalin: 3 மாநில தேர்தல் முடிவுகள் INDIA கூட்டணிக்கு பின்னடைவா? புள்ளி விவரத்துடன் விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!
தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வஙக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க: TN Rain Alert: இன்றும் நாளையும் 3 மாவட்டங்களில் மிக கனமழை.. எச்சரிக்கும் வானிலை.. சென்னைக்கு எப்படி?
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை காரணமாக கட்சியின் பொதுச்செயலாளராக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று நிருபர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களும், நிர்வாகிகளும் பக்கபலமாக இருக்கிறார்கள் என்றும், அரசியலில் ஜெயலலிதாதான் எனக்கு ரோல்மாடல் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க: Premalatha Pressmeet: ஜெயலலிதாதான் ரோல் மாடல்! விஜயகாந்த் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் - பிரேமலதா பரபரப்பு பேட்டி
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளுங்கட்சியான தி.மு.க. அரசுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆளுநர் சிலரின் கைப்பாவையாக செயல்படாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், ஆளுநர் மனம் மாறி தமிழ்நாட்டின் நன்மைக்காக செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க: CM MK Stalin: நேரில் நல்லாதான் பேசுவார்; தமிழ்நாட்டுக்கு எதிராக இருக்கிறாரே? - ஆளுநர் குறித்து ஸ்டாலின் சரவெடி