TN Headlines: அடுத்த 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை; தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் - முக்கிய செய்திகள் இதோ!
TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
- CM MK Stalin Letter: நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடி ஒப்புதல் அளியுங்கள்: குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின்!
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, டெல்லி புறப்பட்டுச் சென்ற இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இன்று (27-10-2023) சந்தித்து நீட் விலக்கு மசோதா குறித்து கடிதம் வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், ”குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள, தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டமுன்வடிவு 2021-க்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டுமென நேரில் வலியுறுத்திய தமிழ்நாடு முதலமைச்சர், இதுதொடர்பாக இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இன்று தான் எழுதியுள்ள கடிதத்தையும் வழங்கினார். மேலும் படிக்க
- TN Rain Alert:அடுத்த 4 நாட்களுக்கு கனமழை அபாயம்; தலைநகர் சென்னையில் நிலவரம் எப்படி? வானிலை அப்டேட் இதோ!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 27.10.2023: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும படிக்க
- CM MK Stalin: “ஆளுநர் புருடா விடுகிறார்.. அவர் பதவியே வேஸ்ட்” ஆர்.என்.ரவியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்ல திருமண விழா சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, திமுக எம்.பி., டி.ஆர்.பாலு மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”முதன்முதலாக மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என சொன்னபோது, எந்த மாநிலமும் அதை நிறைவேற்ற முன்வரவில்லை. மேலும் படிக்க
- Sathyapratha Sahoo: தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள்; ஜனவரி 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் ரிலீஸ் - சத்ய பிரதா சாஹூ
தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும், இறுதி வாக்காளர்கள் பட்டியல் வரும் அடுத்தாண்டு ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படும் எ்றும், தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள் 3.10 கோடி பேரும், ஆண் வாக்காளர்கள் 3 கோடி பேரும் உள்ளனர் என்றும் கூறினார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க ஆகியவற்றிற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் படிக்க
- ’பொறுப்பில்லாத ஆளுநர்; பாஜக தலைவர் அண்ணாமலையா, ஆர்.என்.ரவியா?’ ஜோதிமணி காட்டம்
100 நாள் வேலை திட்டம் வழங்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் 70 மற்றும் 80 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறதா? முறையாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்து இந்த வருடம் 70 ஊராட்சியில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 100 நாள் வேலை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் அரசுப் பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். மேலும் படிக்க