TN Headlines: 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; ஜன 10 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் - முக்கிய செய்திகள்!
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
![TN Headlines: 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; ஜன 10 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் - முக்கிய செய்திகள்! Tamilnadu latest Headlines News Update 6th january 2024 Tamilnadu Flash News Vijayakanth Death TN Headlines: 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; ஜன 10 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் - முக்கிய செய்திகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/06/23f3de7fbd070d3148b7e761c16cb8411704531474220572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
- TN Rain Alert: தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. நாளை ஆரஞ்சு அலர்ட் எத்தனை மாவட்டங்களுக்கு?
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் படிக்க
- Pongal Parisu Thogai 2024: நாளை முதல் டோக்கன்.. 10-ஆம் முதல் தொடங்கும், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்.. முழு ரிப்போர்ட்
நாளை முதல் நியாய விலை கடைகளில் டோக்கன் விநியோகிக்கப்படும் என கூட்டுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும். மேலும் படிக்க
- DMK Youth Conference: இளைஞரணி மாநாட்டிற்கான தேதியை அறிவித்த திமுக - ஜன.21ல் சேலத்தில் பிரமாண்டம்
திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் வரும் 21ம் தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. கடந்த மாதமே நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான அறிவிப்பு, “மிக்ஜாம்” புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு”, வருகிற 21-01-2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலத்தில் நடைபெறும்” என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. மேலும் படிக்க
- Pongal Parisu Thogai 2024: பொங்கல் பரிசு: விவசாயிகளிடம் நேரடியாக கரும்பு கொள்முதல்.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமாக மாவட்ட அளவில் கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண்துறை இணை இயக்குனர், கூட்டுறவு துறை இணை பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரை கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- Jallikattu: 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி.. புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் தொடங்கியது
தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது தமிழர்களின் பாரம்பரியமாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி தான். வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடக்கும் போட்டிகள் உலகப்புகழ் பெற்றது. மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)