மேலும் அறிய

Jallikattu: 2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி.. புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் தொடங்கியது

ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில்  தான் நடைபெறும்.

2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் கோலாகமாக தொடங்கியது. 

தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது தமிழர்களின் பாரம்பரியமாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி தான். வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடக்கும் போட்டிகள் உலகப்புகழ் பெற்றது. 

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில்  தான் நடைபெறும். வழக்கமாக அங்குள்ள அந்தோணியார் தேவாலய புத்தாண்டு விழாவை முன்னிட்டு ஜனவரி 1 ஆம் தேதி தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கமாகும். ஆனால் இம்முறை இன்று (ஜனவரி 6) ஆம் தேதி நடக்கிறது.  இந்த போட்டியில் 746 காளைகள் பங்கேற்கும் நிலையில், 297 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர். 

இதற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்றன. நேற்று காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களும் இன்று டோக்கன் வழங்கப்பட்டது. மேலும் வாடிவாசல், பேரிகார்டு அமைப்பது, மருத்துவ பரிசோதனை செய்யும் இடம், காளைகள் கலெக்சன் பாயிண்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதன் முன்னேற்பாடுகளை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே  ஆய்வு செய்தார். 

இந்நிலையில் இன்று தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர்  ஐ.எஸ்.மெர்சி ரம்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போட்டி நடைபெறும் இடத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் வசதி, காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போட்டி நடைபெறும் திடலை சுற்றி கேமராக்கள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 10 சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர் மற்றும் காளை உரிமையாளருக்கு பல்சர் பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி

Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்

Simmam New Year Rasi Palan: சிம்மத்துக்கு ஜாக்பாட்! 2025 வருஷம் உங்களுக்கு இப்படித்தான் இருக்கும்!

DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!

ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி
Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி
Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்
Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்
Simmam New Year Rasi Palan: சிம்மத்துக்கு ஜாக்பாட்! 2025 வருஷம் உங்களுக்கு இப்படித்தான் இருக்கும்!
Simmam New Year Rasi Palan: சிம்மத்துக்கு ஜாக்பாட்! 2025 வருஷம் உங்களுக்கு இப்படித்தான் இருக்கும்!
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
Breaking News LIVE: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆட்சிககு வர விரும்புகிறது - திருமாவளவன்

Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?

Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..

Kanguva: சூர்யா ரசிகர்களே! அமேசான் ப்ரைமில் ரிலீசானது கங்குவா - OTTயில் வெற்றி பெறுமா?

Embed widget