TN Headlines: ஜன.1 வரை மழை நீடிக்கும்; நாளை ஆருத்ரா தரிசனம் - முக்கியச் செய்திகளின் ரவுண்டப்!
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்
இன்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறுகிறது. இந்த கூட்டம் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வருகிறது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று இந்த கூட்டம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஆகியோரின் வழியில் ஆளுமைத் திறனோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று கழகத்தை வழிநடத்தி வரும், நம் அனைவரின் போற்றுதலுக்கு உரியவரும், தொண்டர்களின் உள்ளங்களில் எல்லாம் ஆட்சி செய்து வரும் எழுச்சி நாயகரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.மேலும் வாசிக்க..
ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய ஆருத்ரா தரிசன விழா
கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழாவில் சுவாமிக்கு இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருமணக் கோலத்தில் காட்சியளித்த அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர், அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி உள்ளிட்ட சுவாமிகளுக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சுவாமிகளுக்கு பால், பழம் வழங்கும் நிகழ்ச்சியும், மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆலயத்தில் கூடி இருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மேலும் வாசிக்க..
நாளை நடைபெறும் ஆருத்ரா தரிசனம்
ஜோதிடத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் இர்ண்டு நட்சத்திரங்கள் மட்டுமே திரு என தொடங்கும். ஒன்று பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திரம் மற்றொன்று சிவபெருமாளுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம். ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரம் வந்தாலும், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் கூடுதல் சிறப்பாகும். மேலும் வாசிக்க..
நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில்! நாகர்கோவில் வரை நீட்டிப்பு
சென்னை - நெல்லை இடையே வியாழன்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கு ரூ.1,620 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில் நெல்லை மட்டுமின்றி, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. வரவேற்பு அதிகமாக உள்ளதால், வியாழன்கிழமை தோறும் கூடுதல் வந்தே பாரத் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயில் வழக்கம்போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க..
15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி..
தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வளி மண்டல் சுழற்சி காரணமாக வரலாறு காணாத அளவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாய் மாறியது. பலரும் தங்களது வீடுகளை இழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் ஒரு சில பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது. பொது மக்களுக்கு நிவாரணப் பொருடகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று நிவாரணப் பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதுமேலும் வாசிக்க..
திருவண்ணாமலை கோயிலில் அலைமோதிய பக்தர்கள்
நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் உலக பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக கருதக் கூடியதுமான அண்ணாமலையார் திருக்கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இவ்வாறு திருவண்ணாமலை நோக்கி வருபவர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் கிரிவலம் வந்தும் அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்மேலும் வாசிக்க..
சுனாமி தாக்கியதன் 19-ஆம் ஆண்டு நினைவு இன்று..
தமிழ்நாட்டில் சுனாமி பேரலை தாக்கியதால் ஏற்பட்ட பேரழிவின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதுகுறித்த சிறப்பு தொகுப்பு ஒன்றை காணலாம்.அப்படியே கரையில் நின்று பார்த்தால் கடல் உள்ளே சென்றால் எப்படி இருக்கும் என நினைக்காத நாளில்லை. அமைதியின் உருவமாய் இருக்கும் கடல் மீனவர்களுக்கு அன்னைமடியாக திகழும். அப்படிப்பட்ட கடல் எத்தகைய பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை நம் கண்முன்னே காட்டியது “டிசம்பர் 26”. அது தான் ‘சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்குதல்’மேலும் வாசிக்க..
ஜனவரி 1-ஆம் தேதி வரை மழை நீடிக்கும்..
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் வரும் 1 ஆம் தேதி வரை மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் 28 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வாசிக்க..