மேலும் அறிய

AIADMK Meeting: அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்.. கூட்டணி குறித்த நிலைப்பாடு என்ன?

இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இன்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறுகிறது. இந்த கூட்டம் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வருகிறது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று இந்த கூட்டம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள், அறிக்கையில் உள்ளபடி இங்கே தரப்பட்டுள்ளது..

தீர்மானம் 1:

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஆகியோரின் வழியில் ஆளுமைத் திறனோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று கழகத்தை வழிநடத்தி வரும், நம் அனைவரின் போற்றுதலுக்கு உரியவரும், தொண்டர்களின் உள்ளங்களில் எல்லாம் ஆட்சி செய்து வரும் எழுச்சி நாயகரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது

தீர்மானம் 2:

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் தன் உயிர் மூச்சாக முன்னிறுத்தி தொடங்கப்பட்ட 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்கிற மாபெரும் மக்கள் இயக்கம், மதுரையில் நடத்திய 'கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு' வரலாற்று வெற்றி பெற்றதற்கு நன்றியும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம் 3:

வட கிழக்குப் பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும்; 'மிக்ஜாம்' புயலை எதிர்கொள்ள முன்பே திட்டமிடாமலும்; காலத்தே மீட்புப் பணிகளை மேற்கொள்ளாமலும், மக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியதோடு, புயலின் தாக்கத்தால் பெய்த பெருமழையின் பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படும் மக்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்த நிவாரண உதவிகளை வழங்காத திமுக அரசுக்கு கடும் கண்டனம்; பொருளாதார இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கிட வலியுறுத்தப்பட்டது.

தீர்மானம் 4:

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் நடவடிக்கைகளை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்போது வேண்டுமென்றே, திட்டமிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பேச்சை ஒளிபரப்பச் செய்யாமல் இருட்டடிப்பு செய்வதற்கு கடும் கண்டனம்! எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை சம்பந்தமாக சட்டமன்ற மரபுகளை இதுவரை கடைபிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம் 5:

மீனவர்கள் நலன் பாதுகாக்க, திமுக-வால் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள திமுக அரசுக்கு வலியுறுத்தல் மற்றும் இலங்கை கடல் கொள்ளையர்களால் வாழ்வாதாரம் இழந்த மீனவ மக்களை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்!

தீர்மானம் 6:

மாநில உரிமைகள் பறிபோனதற்கு தி.மு.க-வே முழுமுதற் காரணமாக இருந்துவிட்டு, தற்போது மக்களின் கவனத்தை திசை திருப்பவும்; பொய்யான 520 வாக்குறுதிகளை அளித்து, அவற்றை நிறைவேற்ற முடியாமல் மக்களை ஏமாற்றவும், பல்வேறு நாடக அரங்கேற்றங்களை நிகழ்த்தும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

தீர்மானம் 7:

சட்டம்-ஒழுங்கு சீரழிவிற்கும், திமுக-வின் மக்கள் விரோதப் போக்கிற்கும் கடும் கண்டனம்!

தீர்மானம் 8:

ஊழலில் திளைத்து நிற்கும் திமுக! 'கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்' என்பதே திராவிட மாடல் ஊழல் ஆட்சியின் தாரக மந்திரம்; ஊழல் ஆட்சியை நடத்தும் முதலமைச்சருக்கு கடும் கண்டனம்!

தீர்மானம் 9:

சிறுபான்மையின கிறிஸ்தவர்களுடைய மக்களான நலன்களைப் இஸ்லாமியர்கள், பாதுகாக்கவும்; 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவும், திமுக அரசுக்கு வலியுறுத்தல்!

தீர்மானம் 10:

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 13.12.2023-ஆம் தேதி பாதுகாப்பு குறைபாட்டால் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது; ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!

தீர்மானம் 11:

ஈழத் தமிழர்கள் நலன் காக்க, ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டி மத்திய அரசை வலியுறுத்தல்!

தீர்மானம் 12:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பல்வேறு மாவட்டங்களில் கடுமையாக பெய்து நெற்பயிர்கள் மற்றும் வேளாண் பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கி பெரும் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், உரிய நிவாரணம் வழங்காமல் விவசாயிகளை வஞ்சித்து வரும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

தீர்மானம் 13:

நெசவாளர்களின் வாழ்க்கை நலிவடையக் காரணமாக இருந்து, நெசவுத் தொழிலை விடுத்து மாற்றுத் தொழிலைத் தேடும் நிலையை ஏற்படுத்தி, தமிழ் நாட்டில் நெசவுத் தொழிலையும், நெசவுத் தொழிலாளர்களின் நலனையும் பாதுகாக்கத் தவறிய திமுக அரசுக்குக் கண்டனம்!

தீர்மானம் 14:

சமூக நீதியை வாய்கிழியப் பேசும் திமுக, பட்டியலின மக்களுடைய நலனில் அக்கறை கொள்ளாமல் அவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பறித்தும்; அனுபவிக்க முடியாமல் தடுத்தும்; அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளை தட்டிப் பறிக்கும் வகையில் செயல்படும் விடியா திமுக அரசின் பட்டியலின மக்கள் விரோதப் போக்கிற்கு கண்டனம்!

தீர்மானம் 15:

தமிழக உயர்கல்வியின் தரம் குறையும் வகையில், கல்வியாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அவசர கதியில் பொதுப் பாடத் திட்டத்தை அமல்படுத்தத் துடிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

தீர்மானம் 16:

தாய் மொழியாம் தமிழ் உள்ளிட்ட அரசியலமைப்புச் சட்டத்தில் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மாநில மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தல்!  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியைக் கொண்டுவர வலியுறுத்தல்!

தீர்மானம் 17:

சமூக நீதியை குழிதோண்டிப் புதைத்து, சமூக நீதிக்கு எதிரான திமுக-வின் மக்கள் விரோதப் போக்கிற்கு கடும் கண்டனம்!

தீர்மானம் 18:

தமிழகத்தின் ஜீவாதார உரிமையான காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் திமுக-வின் சந்தர்ப்பவாதம் மற்றும் துரோகத்திற்கு கடும் கண்டனம்!

தீர்மானம் 19:

'நீட்' என்னும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும்; ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே ‘நீட் தேர்வு' ரத்துதான் என்று திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினும், திமுக-வைச் சேர்ந்தவர்களும் மக்களை ஏமாற்றி வாக்குறுதி அளித்தனர். சொன்னதைச் செய்வோம் என்று கூறி மக்களை ஏமாற்றிய அரசின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம்.

தமிழ் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கத் தவறியும்; பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கத் தவறியும்; வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நோய்த் தொற்று அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ உதவிகளைச் செய்யத் தவறியும், முடங்கிப் போயிருக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், திமுக அரசின் முதலமைச்சருக்கும் கடும் கண்டனம்!

தீர்மானம் 20:

மக்கள் நலன் கருதி புரட்சித் தலைவி அம்மா அரசு கொண்டுவந்த திட்டங்களை முடக்குவது; விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறியது; சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணத்தில் இருந்து ஆவின் பால் விலை வரை உயர்த்தி, மக்களை வஞ்சித்து வரும் சர்வாதிகார விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

தீர்மானம் 21:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும்; புதிய உயர்த்த அணை கட்டப்போவதாக நெருக்கடி கொடுக்கும் திமுக-வின் கூட்டணிக் கட்சி ஆட்சியில் இருக்கும் கேரள அரசின் செயலை கண்டிக்காமலும்; அதைத் தடுக்க சட்டப் போராட்டம் நடத்தாமலும் மெத்தனப் போக்கில் இருந்து வரும் மக்கள் விரோத திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

தீர்மானம் 22: 

ஜனநாயகத்தில் வாக்களிக்கும் உரிமையை அனைவரும் பெற்றிடும் வகையில், எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தகுதியுடைய அனைவரும் வாக்களிக்க ஏதுவாக, குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் அமைந்திட இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தல்!

தீர்மானம் 23:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடிடும் வகையில், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் களப்பணி ஆற்றிட சூளுரை !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Embed widget