Vande Bharat Rail: நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில்! நாகர்கோவில் வரை நீட்டிப்பு - தேதி குறித்த தெற்கு ரயில்வே!
சென்னை - நெல்லை இடையே வியாழன்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Vande Bharat Rail: சென்னை - நெல்லை இடையே வியாழன்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்:
இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டை பொருத்தவரை, சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை இருந்து பெங்களூர் வழியாக மைசூர் என மொத்த மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை பகல் 1.50 மணிக்கு சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் பகல் 2.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லைக்கு சென்றடைகிறது.
நாகர்கோவில் வரை நீட்டிப்பு:
இதற்கு ரூ.1,620 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில் நெல்லை மட்டுமின்றி, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. வரவேற்பு அதிகமாக உள்ளதால், வியாழன்கிழமை தோறும் கூடுதல் வந்தே பாரத் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயில் வழக்கம்போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Official Notice 🗞️ Regarding The Time & Date For Vande Bharath.#VandeBharat | #VandeBharatExtension#Kumarinews pic.twitter.com/GCuuzQ4sT7
— Kumari News (@kumarinewsoffic) December 25, 2023
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 4ஆம் தேதி முதல் சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து வியாழன்கிழமைகளில் காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், நாகர்கோவிலுக்கு மதியம் 2.10 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில், நாகர்கோவிலில் இருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு இரவு 11.45 மணிக்கு வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4ஆம் தேதி முதல் ஜனவரி 25ஆம் தேதி சோதனை அடிப்படையில் வியாழன்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க