TN Headlines: அதிதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்; தமிழ்நாட்டில் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் - முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- TN DSP Transfer: தமிழ்நாட்டில் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் - டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு
TN DSP Transfer: மாநிலம் முழுவதும் 35 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு சட்ட ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆணையர்களும் இடமாற்றம் செய்துள்ளதோடு, காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பிக்களுக்கும் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுளன. மேலும் படிக்க
- Covid JN.1 variant: அதிதீவிரமாக பரவும் புதிய கொரோனா ஜேஎன்.1 வேரியண்ட்- பாதிப்பு என்ன? எச்சரிக்கும் எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர்
கொரோனா ஜேஎன்.1 வேரியண்ட் தொடர்பாக பேசியுள்ள எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் ரந்தீப் குலேரியா, “புதிய கொரோனா வேரியண்டான JN.1 மிகவும் வேகமாக பரவுகிறது. அதிக நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகிறது. ஆனாலும் கடுமையான நோய்த்தொற்றுகள் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது போன்ற சூழலை ஏற்படுத்தவில்லை. இந்த வேரியண்ட் படிப்படியாக ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் படிக்க
- Annamalai: பேரிடர் நிவாரண நிதி கேட்ட தமிழ்நாடு அரசு.. விரைவில் மத்திய அரசு வழங்கும் என அண்ணாமலை நம்பிக்கை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு டிசம்பர் 26 ஆம் தேதி வரவிருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் நெல்லையில் இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தூத்துக்குடியில் மெல்ல மெல்ல மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியுள்ளது. மேலும் படிக்க
- PM Modi Trichy Visit: பாஜக தொண்டர்கள் குஷி.. ஜனவரி 2ம் தேதி திருச்சி வருகிறார் பிரதமர் மோடி - திட்டம் என்ன?
பிரதமர் மோடி ஜனவரி 2ம் தேதி தமிழகம் வர இருப்பது பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.1200 கோடி செலவில் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து வைக்க பிரதமர் மோடி அங்கு வர உள்ளார். இதை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் படிக்க
- TN Rain Alert: இன்னும் ஒரு வாரத்துக்கு மழைதான்.. மக்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டில் டிசம்பர் 30 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஏற்கனவே இந்த மாதம் டிசம்பர் 4,5 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் படிக்க