TN DSP Transfer: தமிழ்நாட்டில் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் - டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு
TN DSP Transfer: மாநிலம் முழுவதும் 35 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு சட்ட ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
TN DSP Transfer: மாநிலம் முழுவதும் 35 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு சட்ட ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆணையர்களும் இடமாற்றம் செய்துள்ளதோடு, காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பிக்களுக்கும் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுளன. அதன்படி, “அடையாறு உதவி காவல் ஆணையராக இருந்த நெல்சன் தாம்பரம் உதவி ஆணையராக மாற்றம். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் சைதாப்பேட்டை உதவி ஆணையராகவும், சேலையூர் காவல் உதவி ஆணையர் முருகேசன் அடையாறு காவல் உதவி ஆணையராகவும் மாற்றம். திருவள்ளூர் மாவட்ட மனித உரிமை ஆணைய டிஎஸ்பி ஆக இருந்த இளங்கோவன் திருவொற்றியூர் காவல் உதவ் ஆணையராகவும், ஆவடி பட்டாபிராம் காவல் உதவி ஆணையராக இருந்த சதாசிவம் வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையராகவும் மாற்றம். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணயராக இருந்த மோகன், கடலூர் திட்டக்குட் மாவட்ட டிஎஸ்பியாக நியமனம்” செய்யப்பட்டுள்ளார்.