மேலும் அறிய

PM Modi Trichy Visit: பாஜக தொண்டர்கள் குஷி.. ஜனவரி 2ம் தேதி திருச்சி வருகிறார் பிரதமர் மோடி - திட்டம் என்ன?

PM Modi Trichy Visit: பிரதமர் மோடி ஜனவரி 2ம் தேதி திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார்.

பிரதமர் மோடி ஜனவரி 2ம் தேதி தமிழகம் வர இருப்பது பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.1200 கோடி செலவில் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. அதனை திறந்து வைக்க பிரதமர் மோடி அங்கு வர உள்ளார். இதை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், பிரதமர் மோடி தமிழகம் வருவது பாஜக தொண்டர்களுக்கு உந்துகோலாக அமையும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர்.

திருச்சி விமான நிலையம்:

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்தபின், கூடுதலாக புதிய விமான நிறுவனங்களும் தங்களது சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சூழலில் ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகள் வந்து செல்லும் நிலையில், புதிய முனையம் 2027-28 ஆண்டுக்குள் 40 லட்சம் பயணிகளை கையாளும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்த பின் பழைய முனையம் முழுமையாக 250 மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் சர்வதேச சரக்கு முனையமாக மாற்றப்பட உள்ளது.

புதிய முனையத்தில் உள்ள வசதிகள்:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் சிறிய அளவிலான விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில்,  எதிர்காலத்தில் போயிங் போன்ற 200க்கும் அதிகமான பயணிகளுடன் பெரிய விமானங்களும் வந்து செல்லும் விதமாக   திருச்சி விமான நிலையத்தை நவீனமாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதியுடன் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 134 ஏக்கரில் 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் 4 நுழைவாயில்கள், 12 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு,  பயணிகள் வௌியேற 4 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 60 செக் இன் கவுன்ட்டர்கள் உள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!
மூவர்ணத்தில் ஜொலித்த வங்கக்கடல்! 20 நாட்டிகல் மைல் தூரம் கடலுக்குள் சென்று போலீசார் நடத்திய பிரம்மாண்ட பேரணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

Embed widget