மேலும் அறிய
Tamilnadu Roundup: ரூ.90,000-த்தை கடந்த தங்கம், பாமக தவெக கூட்டணியா.?, 10 மாவட்டங்களில் இன்று கனமழை - பரபரப்பான 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, 90 ஆயிரத்தை கடந்தது. ஒரு கிராமிற்கு ரூ.100 உயர்ந்து, கிராம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்து, அரசின் நிதி உதவியை வழங்கினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
- 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தவெக உடன் கூட்டணியா என்பது போகப் போக தெரியும் எனவும் அன்புமணி ராமதாஸ் விளக்கம்.
- விசிக-வினர் வழக்கறிஞரை தாக்கிய விவகாரத்தில், தனது வாகனம் இளைஞரின் வாகனம் மீது மோதியதாக கூறப்படுவது பொய் எனவும், வழக்கறிஞர் தன்னிடம் வேண்டுமென்றே வம்பிழுத்ததாகவும் திருமாவளவன் விளக்கம்.
- சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. பூடானிலிருந்து சட்டவிரோதமாக சொகுசுக் கார்கள் இறக்குமதி செய்த புகாரில் நடவடிக்கை. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நடிகர் மம்முட்டி இல்லத்திலும் சோதனை.
- சமூக வலைதளங்களில் பரவும் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை நீக்குவது தொடர்பாக வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது மத்திய அரசு.
- தமிழ்நாட்டில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
- நீட் தேர்வு மதிப்பெண்ணை மாற்றி, போலி சான்றிதழ் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த திண்டுக்கல் மாணவி பெற்றோருடன் கைது.
- கோவை அவினாசி சாலையில் 10.10 கி.மீ தூரத்திற்கு கட்டப்ட்டுள்ள தமிழ்நாட்டின் முதல் நீளமான மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு. பாலத்தை அவர் நாளை திறந்து வைக்கிறார்.
- திருச்சி துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயிலில் பொன்னூஞ்சல் விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















