மேலும் அறிய
Tamilnadu Round Up: இந்தி மொழிக்கு தடை? சட்டசபையில் கருப்பு பேட்ஜ், கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP Nadu
- அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகள் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல்
- அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்
- தமிழக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு பட்டை அணிந்து வருகை
- தமிழ்நாட்டில் அக்டோபர் 15 முதல் 21 வரை 7 முதல் 11 செ.மீ வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.
- மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டு சவரனுக்கு ரூ.95,000-ஐ நெருங்கியுள்ளது தங்கம் விலை - ஒரு கிராம் ரூ.11,860-க்கு விற்பனை
- தீபாவளியை முன்னிட்டு, அக்.17,18,21,22 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்தில் மாற்றம் - தாம்பரம் மாநகர காவல் அறிவிப்பு
- திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து
அதிவிரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை
திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் அதிவிரைவு ரயில் திருவெறும்பூரில் இன்று முதல் நின்று செல்லும் - மதிமுக எம்.பி. துரை வைகோ - தீபாவளி பண்டிகை முன்னிட்டு, அதிகாலை முதலே கலைகட்டிய உளுந்தூர்பேட்டை ஆடு சந்தை - ரூ.2 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை
- மயிலாடுதுறை அருகே அரசுப் பேருந்தின் படியில் பயணம் செய்த மாணவர்களை மேலே வரச் சொன்ன அரசுப் பேருந்து நடத்துநர் மீது தாக்குதல் - நடத்துநரின் வலது கையில் எலும்பு முறிவு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















