மேலும் அறிய
Tamilnadu Headlines: SIR-க்கு இன்றே கடைசி நாள்! கூண்டில் சிக்கிய புலி.. தொடரும் வருமான வரித்துறை சோதனை- 10 மணி செய்திகள்
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

முக்கியச்செய்திகள்
Source : ABPLIVE AI
- சென்னையில் இன்று 10வது நாளாக 24 புறப்பாடு, 12 வருகை என மொத்தம் 36 இண்டிகோ விமானங்கள் ரத்து. நேற்று 70 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று பாதியாக குறைந்துள்ளது.
- உதகை மாவனல்லா பகுதியில் பழங்குடியின பெண்ணை அடித்துக் கொன்ற T37 புலி 16 நாட்களுக்குப் பின் கூண்டில் சிக்கியது. ஆண் புலியை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல ஆலோசனை செய்து வருகிறது வனத்துறை.
- சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபல தொழிலதிபர் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- சென்னை ECR கொட்டிவாக்கத்தில் சாலையை கடக்க முயன்ற பீகாரைச் சேர்ந்த ராகேஷ் (35) என்பவர் பைக் மோதி உயிரிழப்பு.
- வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை (SIR) அளிக்க இன்று கடைசி நாள்!
- வரும் 16ம் தேதி வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்.வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் வரும் 16-ம் தேதி முதல் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
- இன்று தொடங்குகிறது 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா.சென்னை பிவிஆர் சத்யம் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே இந்த திரைப்படங்களை திரையிட திட்டம்
- சென்னையில் உள்ள குப்பை கிடங்குகளில் இருந்து 48.41 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்
- தமிழ்நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68,467-ல் இருந்து 75,035 ஆக உயர்த்தியது இந்திய தேர்தல் ஆணையம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement






















