மேலும் அறிய

Students Community Details : அரசுப்பள்ளி மாணவர்களிடம் சாதி குறித்து விவரம் கேட்கப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சாதி குறித்து கேட்கப்பட்தா என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

“ தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை அடிப்படையாக வைத்து நாளிதழ் ஒன்றில் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்த விவரப் பதிவேட்டில் அவர்களின் ஜாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச் சட்டம் நடைமுறைக்கு வந்தது முதலே ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை வகுத்தபின் அதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு தொடர்புடைய பள்ளிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான நிதி வழங்கப்படும். 2020 -21ம் கல்வியாண்டில் பள்ளி மேம்பாட்டு திட்டம் வகுக்கப்பட்டது குறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் அனுப்பாத பள்ளிகளை விரைந்து அனுப்ப வேண்டுமெனக் கோரி பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.


Students Community Details : அரசுப்பள்ளி மாணவர்களிடம் சாதி குறித்து விவரம் கேட்கப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்

அந்த சுற்றறிக்கையில், குழந்தைகள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களா? பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களா? பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களா? அல்லது சிறுபான்மையினரா? அல்லது முற்பட்ட வகுப்பினரா? என்று மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தையின் சாதியை கேட்பதற்கும், அக்குழந்தை சார்ந்த வகுப்பை கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது.

பள்ளிகளில் மாணவர்கள் என்ன வகுப்பைச் சார்ந்தவர்க் என்கிற தகவல் ஏற்கனவே இருக்கிறது. அந்த விவரங்களின் அடிப்படையில்தான் அவர் பட்டியல்/ பழங்குடியினரா? பிற்படுத்தப்பட்டவரா? முற்படுத்தப்பட்டவரா? என்பது முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இது வெகுகாலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை. புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதை மிக எளிதாக பதிவேற்றம் செய்துவிட முடியும். இதன்மூலம் பணிச்சுமை குறைகிறது. ஒரு மாணவர் பள்ளியில் சேரும்போது ஒரு முறை பதிவு செய்தால் போதும்.


Students Community Details : அரசுப்பள்ளி மாணவர்களிடம் சாதி குறித்து விவரம் கேட்கப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்

இவர்கள் சார்ந்த வகுப்புதான் செயலியில் பதிவாகுமே தவிர மாணவர்களின் சாதி எங்குமே சேமிக்கப்படுவதில்லை. விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உட்பட்ட பல்வேறு சிறப்புத்திட்டங்களுக்கான பலன்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த தகவல் கேட்கப்படுகிறது. பின்னாளில் அவர்கள் இட ஒதுக்கீடு மூலம் பயன் பெறவும் இந்த அடிப்படைத் தகவல் தேவைப்படுகிறது.

ஒரு மாணவர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதுதான் தமிழக அரசுக்கு தேவையே தவிர அந்த மாணவரின் சாதி அல்ல. சமூக நீதியின் அடிப்படையில் இயங்கும் தமிழக அரசு தன் நோக்கத்தில் தெளிவாக இருக்கிறது. அந்த சுற்றறிக்கையில் சாதி கேட்கப்பட்டதாக ஒரு பொய்ச் செய்தி உலவவிடுவது உண்மைக்கு புறம்பானது. சாதிக்கும் வகுப்புக்கும் வேறுபாடு தெரியாமல் வெளியிடப்பட்டிருக்கிறது அச்செய்தி.


Students Community Details : அரசுப்பள்ளி மாணவர்களிடம் சாதி குறித்து விவரம் கேட்கப்பட்டதா? தமிழக அரசு விளக்கம்

தமிழக பள்ளிகளில் சாதியப் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற தகவல் தெரிந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை விளிம்பு நிலையில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கென கேட்கப்படும் விவரங்களை திரித்து மாணவர்களின் சாதியை பள்ளிக்கல்வித்துறை கேட்டது போன்றதொரு தோற்றத்தை தர முயல்வது அநீதி. முற்றிலும் பொய்யானது. தமிழக அரசின் சமூக நீதிக்கொள்கைக்கு முரணானது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இது சாதாரண மரமில்லை... ‘கடல் திராட்சை’! புதுச்சேரி மக்களின் கண்ணில் படாத இயற்கை தந்த பரிசு!
இது சாதாரண மரமில்லை... ‘கடல் திராட்சை’! புதுச்சேரி மக்களின் கண்ணில் படாத இயற்கை தந்த பரிசு!
பதவி உயர்வு மறுப்பு, படிகளில் பாகுபாடு: காவலர்களின் குறைகளைக் களைய அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
பதவி உயர்வு மறுப்பு, படிகளில் பாகுபாடு: காவலர்களின் குறைகளைக் களைய அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
தோண்டப்பட்ட சாலை... எரியாத தெருவிளக்குகள்: புதுச்சேரி கிருஷ்ணா நகரில் பொதுமக்கள் அவதி!
தோண்டப்பட்ட சாலை... எரியாத தெருவிளக்குகள்: புதுச்சேரி கிருஷ்ணா நகரில் பொதுமக்கள் அவதி!
Chennai Power Cut: மக்களே உஷார்.. சென்னையில் ஆகஸ்ட் 4ல் எங்கெல்லாம் மின்தடை? - லிஸ்ட் இதோ!
Chennai Power Cut: மக்களே உஷார்.. சென்னையில் ஆகஸ்ட் 4ல் எங்கெல்லாம் மின்தடை? - லிஸ்ட் இதோ!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Embed widget