மேலும் அறிய

Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 1,344 பேருக்கு கொரோனா.. 14 பேர் உயிரிழப்பு!

கொரோனா: நேற்றைய பாதிப்பை விட இன்று சற்றுக்குறைந்துள்ளது. 

கொரோனாவுக்கு 1,43,863 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,344 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 164 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 14 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

நேற்று கொரொனாவால் 1359 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்றைய பாதிப்பை விட இன்று சற்றுக்குறைந்துள்ளது.

விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ இதுவரை 45,601 பேர்‌ கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. இவர்களில்‌ 45,059 போ்‌ குணமடைந்தனர்‌. 354 போ்‌ உயிரிழந்தனர்‌. இந்த தினசரி பாதிப்பு பொது முடக்கம்‌ காரணமாக படிப்படியாக குறையத்‌ தொடங்கியது. இந்த நிலையில் இன்று (09-10-2021) 12 நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதே நிலை நீடித்தால்‌, விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ கொரோனா பரவல்‌ மேலும்‌ குறைந்து, பாதிப்பு வெகுவாகக்‌ குறைய வாய்ப்புள்ளது. இந்த புள்ளி விவரங்கள்‌ விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மருத்துவமனைகள்‌ ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌ போன்ற இடங்களில்‌ நேரடியாக கொடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள்‌ அடிப்படையில்‌ வெளியானவையாகும்‌. வெளி மாவட்டங்களில்‌ பரிசோதனை செய்து பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட விழுப்புரம் ‌மாவட்டத்தைச்‌ சேர்ந்தவர்களின்‌ எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில்‌ சேர்க்கப்படவில்லை என சுகாதாரத்‌துறையினர்‌ தெரிவித்தனர்‌. 

கடந்த சில மாதங்களாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. அவ்வப்போது கொரோனா பாதிப்புகளில் சென்னை முதலிடம் பிடிப்பதும், மீண்டும் கோவை முதலிடம் பிடிப்பதுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருப்பதால், கோவை இரண்டாம் இடத்தில் உள்ளது. கோவையில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்று பாதிப்புகள் இறங்கு முகத்தில் உள்ளது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 3 பேருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று மட்டும் 13 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பதிவை விட ஐந்து பேருக்கு தொற்று குறைவு. இதுவரை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 57 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 22 ஆயிரத்து 488 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 13 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 21 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் உயிரிழக்காததை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 311 ஆக தொடர்கிறது. அதேபோல தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 93.99 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget