மேலும் அறிய

TN Corona Update | தமிழகத்தில் புதிதாக இன்று 724 பேருக்கு கொரோனா தொற்று... 10 பேர் உயிரிழப்பு

வேலூரில் 37.63 சதவீதமும், திருவள்ளூரில் 14.24 சதவீதமும், சென்னையில் 16.09 சதவீதமும் தொற்றாளர்கள் கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 724  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,30,516   ஆக அதிகரித்துள்ளது. இன்று, விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட  சோதனையைல் எந்த சர்வதேச பயணிகளிடமும் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.   

குணமடைவோர் எண்ணிக்கை:  கடந்த 24 மணிநேரத்தில் 734 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,85,946 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98.3% குணமடைந்துள்ளனர்.

இறப்பு எண்ணிக்கை:  கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 36,529 ஆக அதிகரித்துள்ளது.  

TN Corona Update | தமிழகத்தில் புதிதாக இன்று  724 பேருக்கு கொரோனா தொற்று... 10 பேர் உயிரிழப்பு

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை:  மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8,041 ஆக குறைந்துள்ளது. இதில், தோராயமாக, 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், ஈரோடுஆகிய மூன்று மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 24% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும்  நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பின் தீவிரத்தன்மை என்ன? தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சில தினங்களாக  குறைந்து வருகிறது. இருப்பினும், மாநிலத்தின் மொத்த தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 0.7 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 1 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே  கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  1,01,820 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 (5,38,50,322) கோடியாக அதிகரித்துள்ளது. 

TN Corona Update | தமிழகத்தில் புதிதாக இன்று  724 பேருக்கு கொரோனா தொற்று... 10 பேர் உயிரிழப்பு

ஒமிக்ரான் தொற்று:  பி.1.1.529 என்ற மாறுபட்ட ஒமிக்ரான் கொரோனா தொற்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  கடந்த மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்று இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. பரவும் வேகம் தீவிரமாக இருக்கும் என்பதால் இதனை உலக சுகாதார அமைப்பு கவலையளிக்கக்கூடிய வகை என்று அறிவித்தது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படாது என்பதற்கு எந்த ஆதாராமும் இல்லை என்றாலும், அதன் ஸ்பைக் புரதத்தில் ஏற்பட்டுள்ள மூலக்கூறுகள் மாற்றம், தடுப்பூசியின் செயல்திறனைக் குறைக்கக் கூடும் என்று கணக்கிடப்படுகிறது

உருமாறிய இந்த ஓமைக்ரான் தொற்று, ஆர்டிபிசிஆர் மற்றும் ராபிட் ஆண்டிஜென் பரிசோதனைகளிலிருந்து தப்பிவிடாது என்பதால், பரிசோதனைகளை அதிகரிப்பதோடு, பாதிப்பு அறிகுறி உடையவர்களை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கமாறு மத்தியி அரசு மாநில அரசுகளை  கேட்டுக் கொண்டுள்ளது. 

தற்போது, இந்தியாவில் இதுவரை 12 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்ட நாடுகளை அபாய பிரிவு பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளிடம் கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், பயணத் தடைகள் தேவையற்றது எனவும், இதன்மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தடைபடும் என்றும் உலக சுகாதார அமைப்பு  அமைப்பு முன்னதாக தெரிவித்தது. பயணத்தடைகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அந்த அமைப்பு கூறியது.  

முன்னதாக, டிசம்பர் 3-ம் தேதியுடன் முடிவடைந்த 30 நாட்களில், தமிழ்நாட்டில் 23,764 புதிய தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.  வேலூரில் 37.63 சதவீதமும், திருவள்ளூரில் 14.24 சதவீதமும், சென்னையில் 16.09 சதவீதமும் தொற்றாளர்கள் கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தது.

இந்த சூழலில்  தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்பைத் தடுக்கவும், பரிசோதனை தொடர்பு கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல், கொரோனா நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுதல் ஆகிய உத்திகள் மூலமாக நிலையை கட்டுக்குள் வைத்திருக்கத், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறியது 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Subramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
Kottukkaali : சிறப்பு விருது பெற்ற சூரியின் கொட்டுக்காளி...உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனா பென்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget