பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Selvaperunthagai - Armstrong :செல்வப்பெருந்தகையை பதவி நீக்கம் செய்யக்கோரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக கூறி, அவர் பதவி மற்றும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர் விசாரணை மற்றும் கைது நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை குற்றம்சாட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. “ தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடந்த 2008 ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். இவருக்கு, மறைந்த தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருக்கிறது. இவர் மீது ஆடிட்டர் பாண்டியன், ஆல்பர்ட் மற்றும் பிபிஜி சங்கர் கொலை வழக்கில் கொலையாளியாகவும் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவராகவும் உள்ளார்.
இந்நிலையில் அவர் பதவி மற்றும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் உள்ள வேணுகோபால்சாமி கோவில் தெருவில் வசித்து வந்த நிலையில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி இரவு, தனது வீட்டு அருகே நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பியோடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியது. அதில் டெலிவரி ஊழியர்கள் போல் வந்த கும்பல் ஒன்று ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி விட்டு 3 இருசக்கர வாகனங்களில் தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா, அவரது நண்பர்கள் என கூறப்படும் ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதனிடையில் விசாரணையின் போது தப்பியோட முயன்றதால் திருவேங்கடத்தை காவல் துறையினர் என்கவுண்டரில் சுட்டதைத் தொடர்ந்து திருவேங்கடம் உயிரிழந்தார்.
இந்நிலையில், செல்வப்பெருந்தகை மீதும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியை கடிதம் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.