மேலும் அறிய
Advertisement
MK Stalin Meets Modi: பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
துபாயில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட நிலையில் தமிழ்நாடு திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை டெல்லி சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு பிரதமர் மோடியை சந்தித்தார்.
பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் அவரை தி.மு.க.வின் எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் வாசலுக்கே சென்று வரவேற்றனர். மேலும், தி.மு.க. எம்.பி.க்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion