LIC IPO | எல்.ஐ.சி பங்கு விற்பனையை நிறுத்திட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை !
எல்.ஐ.சி பங்குகள் விற்பனை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் எல்.ஐசி நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கான ஐபிஓ விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து எல்.ஐ.சி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், "எல்.ஐ.சி நிறுவனம் பல ஆண்டுகளாக பல கோடி இந்தியர்களின் நம்பிக்கையை பெற்று இருந்தது. மேலும் அந்த நிறுவனம் பலருக்கு சமூகபாதுகாப்பு அளித்து வந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் 5 சதவிகித பங்குகளை விற்கும் மத்திய அரசி முடிவு அதை தனியார் மயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அது மக்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துகளுக்கு எதிராக உள்ள முடிவாக உள்ளது. ஒரு நல்ல அரசு பல பெரிய நிறுவனங்களை கட்டமைக்கும் அரசாக இருக்க வேண்டும். அதைவிடுத்து நிறுவனங்களை விற்கும் பணியில் ஈடுபடக் கூடாது. ஆகவே மத்திய அரசு எல்.ஐ.சி பங்குகளை விற்கும் முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
LIC over the years has catered to the needs of crores of Indians, earned their trust and has provided social security with its efficient functioning. (1/3) pic.twitter.com/bctqaaY7CP
— M.K.Stalin (@mkstalin) February 14, 2022
முன்னதாக மத்திய அரசு பட்ஜெட்டில் எல்.ஐ.சி பங்குகளின் விற்பனை தொடர்பாக கூறியது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. பல முக்கிய அரசியல் தலைவர்களும் இதற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
An ideal government shall build institutions instead of involving itself in a selling spree. I urge the Union Govt to roll-back this ill-thought-out decision and save @LICIndiaForever. (3/3)
— M.K.Stalin (@mkstalin) February 14, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: வினாத்தாள் கசிவிற்கு காரணமான பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை