![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Question Paper leak | வினாத்தாள் கசிவிற்கு காரணமான பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை
10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் வினாத்தாள் கசிவு தொடர்பாக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Question Paper leak | வினாத்தாள் கசிவிற்கு காரணமான பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை TN school education department to take necessary action against government employees involved in Question paper leak Question Paper leak | வினாத்தாள் கசிவிற்கு காரணமான பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/6daabee39dbaded848df7d7689963fd6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி திருப்புதல் தேர்வு தொடங்கியது. 10 ஆம் தேதி விடுமுறை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைப்பெற்றது. இன்று 14 ஆம் தேதி பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வும், பன்னிரண்டாம் வகுப்பு கணினி தேர்வு நடக்க உள்ளது. இந்நிலையில் இதற்கான வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியாகி விட்டதாக நேற்று நள்ளிரவு தகவல் பரவியது. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பு எழுந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறை இந்த வினாத்தாள் கசிவதற்கு காரணமாக இருந்த அரசு அலுவலகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கெனவே வெளியான தேர்வு அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சார்பில் ஒரு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், "தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 09.02.2022 முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் சில தேர்வுகளுக்கான வினாத்தள் தேர்வு நடைபெறும் முன்பே சமூக வலைதளங்களில் வெளிவந்ததாக செய்தி ஊடங்கள் வழியாக அறியப்பட்டதன் அடிப்படையில், துறை ரீதியாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில் திருவண்ணாமலை மாவட்டம் போலூர் ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் வந்தவாசியிலுள்ள ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலிருந்து வினாத்தாள் வெளியானது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணமான பள்ளிகளைச் சார்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இத்தேர்வுகள் நடத்துவது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் அளித்த வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி திருப்புதல் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: 10,12ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் லீக் - CSR பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீஸ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)