Annamalai | யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருவள்ளூர் மாணவி தற்கொலை குறித்து அண்ணாமலை
திருவள்ளூர் மாணவியின் தற்கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
![Annamalai | யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருவள்ளூர் மாணவி தற்கொலை குறித்து அண்ணாமலை Tamilnadu BJP Leader Annamalai asks government to take necessary action in Thiruvallur College Girl suicide case Annamalai | யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருவள்ளூர் மாணவி தற்கொலை குறித்து அண்ணாமலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/17/e868debb4375557fcb82fe2fce95c541_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்து கோட்டை கிராமம். இங்கு ஓடை ஓரம் அமைந்துள்ள கோவிலில் வைத்து முனுசாமி என்பவர் அருள்வாக்கு கூறிவருகிறார். இவரிடம் தாமரைபாக்கத்தை அடுத்த கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிகாம் படித்து வருகிறார். கடந்த 18 மாதங்களாக ஆவி, பேய், பிசாசு உள்ளிட்ட சேட்டையால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் உறவினர்களால், அந்த கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அடிக்கடி இக்கோவிலில் அப்பெண்ணை தங்க வைத்து பூஜை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஹேமமாலினி திடீரென தற்கொலை செய்துள்ளார். இந்த விவகாரம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், “மிகுந்த வேதனைக்குள்ளாகிற கடும் கண்டனத்துக்குறியைச் சம்பவம் இது.
மிகுந்த வேதனைக்குள்ளாகிற கடும் கண்டனத்துக்குறியைச் சம்பவம் இது.
— K.Annamalai (@annamalai_k) February 17, 2022
குற்றம் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் அவர்களின் சமூக விரோத கட்டமைப்பின் மீதும் எந்த தயவு தாட்சனையின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும். #Justice4Hemamalini
குற்றம் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் அவர்களின் சமூக விரோத கட்டமைப்பின் மீதும் எந்த தயவு தாட்சனையின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கையைத் துரிதமாக எடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
அந்த மாணவியின் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)