TN Weather Update: கொளுத்தும் சூரியன்.. 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகும் வெப்பநிலை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..
மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![TN Weather Update: கொளுத்தும் சூரியன்.. 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகும் வெப்பநிலை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.. Tamil Nadu will experience moderate rain for the next 5 days due to westerly winds and convection, according to the Chennai Meteorological Department. TN Weather Update: கொளுத்தும் சூரியன்.. 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகும் வெப்பநிலை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/16/023e23316e560821c233d357158348121684221012017589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17.05.2023 முதல் 20.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
16.05.2023, 17.05.2023 & 18.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
நேற்று தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் 105.44° பாரன்ஹீட், சென்னை மீனம்பாக்கம் 105.44° பாரன்ஹீட், கடலூர் 102.92° பாரன்ஹீட், ஈரோடு 103.64° பாரன்ஹீட், கரூர் பரமத்தி 104.9° பாரன்ஹீட், மதுரை நகரம் 102.2° பாரன்ஹீட், மதுரை விமான நிலையம் 103.28° பாரன்ஹீட், நாகப்பட்டினம் 100.04° பாரன்ஹீட், பரங்கிப்பேட்டை 104.36° பாரன்ஹீட், நாமக்கல் 100.4° பாரன்ஹீட், பாளையங்கோட்டை 102.2° பாரன்ஹீட், சேலம் 102.02° பாரன்ஹீட், தஞ்சாவூர் 102.2° பாரன்ஹீட், திருச்சிராப்பள்ளி 103.1° பாரன்ஹீட், திருத்தணி105.8° பாரன்ஹீட், வேலூர் 108.14° பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
2020 ஆம் ஆண்டிற்கு பின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. நண்பகல் நிலவரப்படி 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): வேலூர் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
16.05.2023 மற்றும் 17.05.2023: தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
கொல்லும் கள்ளச்சாராயம்: மெத்தனாலை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)