மேலும் அறிய

Rain Alert: அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! குடையுடன் செல்லுங்கள் மக்களே..

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல்,கடலூர் ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்திற்கு கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது.  இது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை இலங்கை வழியாக குமரிக்கடல், அதனை ஒட்டிய பகுதியில் நோக்கி நகரக்கூடும். 

25.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

26.12.2022: தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
 
27.12.2022, 28.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 
 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

 25.12.2022: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  

26.12.2022: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  

27.12.2022: குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60   கிலோ மீட்டர் வேகத்தில்    வீசக்கூடும்.  

28.12.2022: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60   கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Embed widget