மேலும் அறிய

TN Rain Alert: தமிழகத்தை நெருங்கிய புயல்.. அடுத்த 3 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை..?

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர்,திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று, இன்று மாலை புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இனி வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..? 

டிசம்பர் 8: ஆம் தேதி தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் தென் கடலோர ஆந்திரப் ஒட்டியுள்ள பகுதிகளில் கன முதல் மிக கனமழையுடன் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 9: அன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் மற்றும் வட கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல, தெற்கு கடலோர ஆந்திராவை ஒட்டிய பகுதியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

அந்தமான் கடல் பகுதிகள்:  07.12.2022   அன்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து   08.12.2022  அன்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 07.12.2022   அன்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து   08.12.2022  அன்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தமிழக- புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வட இலங்கை கடலோரப்பகுதிகள் :  சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்தில் 08.12.2022  அன்று காலை தொடங்கி காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து  08.12.2022   மாலை முதல் 09.12.2022  மாலை வரை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும்,  09.12.2022   மாலை முதல் 10.12.2022  காலை வரை மணிக்கு 70 முதல் 80  கிலோ மீட்டர் வேகத்தில் வேகத்தில் இடையிடையே 90  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து   10.12.2022 மாலை மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் எங்கு கரையை கடக்கிறது..? 

டிசம்பர் 8 ஆம் தேதி காலை வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்க கடலை அடைய வாய்ப்புள்ளது. 

இதை தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி, மாண்டஸ் புயலானது நகர வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget