மேலும் அறிய

Tamilnadu Tourism : படகு சவாரி, வள்ளுவர் சிலைக்கு ஒளியூட்டம்.. அடுத்தடுத்த அட்டகாச அறிவிப்புகள்.. இதைப் படிங்க..

தமிழ்நாட்டில் முதல்முறையாக முட்டுக்காட்டில் மிதவை படகுடன் கூடிய உணவகம் (Floating Restaurant)அமைக்கப்படும் - அமைச்சர் மதிவேந்தன்

2021 - 2022-ஆம் ஆண்டிற்கான சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவந்தன் சுற்றுலா வளர்ச்சிக்கான 30 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சில முக்கிய அறிவிப்புகளை இங்கே பார்ப்போம்.  

சென்னை மெரினாவில் படகு சவாரி தொடங்கப்படும். 

தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமான பூம்புகார் புனரமைக்கப்படும். 

தமிழ்நாட்டின் சுற்றுலா இடங்களை மேம்படுத்தும் வகையில், நினைவுச் சின்னங்களை ஒளியூட்டுதல், நிலச்சீரமைப்பு, ஒலி-ஒளி காட்சி அமைத்தல், பாரம்பரியச் சின்னங்கள் புனரமைத்தல், நீர்வீழ்ச்சியின் அழகினை கண்டு ரசிக்க பார்வையாளர் மாடம் மற்றும் கூடுதல் வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் விதமாக, சுற்றுலா தலங்கள் வளர்ச்சித் திட்டம் (Tourism Destination Development Scheme) உருவாக்கப்படும்.

கன்னியாகுமரியில் அமைந்துள்ள 133 அடி அய்யன் திருவள்ளுவர் சிலையை மேலும் அழகூட்டும் வகையில் சுற்றுலா பயணிகள் இரவிலும் கண்டு மகிழ லேசர் தொழில்நுட்ப உதவியுடன் முப்பரிமாண ஒளியூட்டம் அமைக்கப்படும். 

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் தனித்துவத்தை நிலைப்படுத்துதல், சுற்றுலா தலங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துதல், கூடுதல் தங்கும் இடங்கள் உருவாக்குதல், சுற்றுலாப் பயணிகளின் தங்கும் காலத்தினை அதிகரித்தல், அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டுதல், தனியார் மற்றும் அந்நிய முதலீட்டை ஊக்குவித்தல், பல்வேறு வகையான சுற்றுலாக்களை மேம்படுத்துதல் ஆகிய காரணிகளை உள்ளடக்கிய சுற்றுலா பெருந்திட்டம் (Master Plan for Tourism) தயாரிக்கப்படும். 

மதுரை மற்றும் இராமேஸ்வரத்தில் ஏராளமான கோயில்களும், சுற்றுலா தலங்களும் உள்ளன. இவ்விடங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கும், அவர்களின் பயண நேரத்தை குறைப்பதற்கும் மதுரை, இராமேஸ்வரம், கொடைக்கானல் இடையே ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் ஹெலிகாப்டர் இறங்குதளம் (Helipad) அமைக்கப்படும்.

Tamilnadu Tourism : படகு சவாரி, வள்ளுவர் சிலைக்கு ஒளியூட்டம்.. அடுத்தடுத்த அட்டகாச அறிவிப்புகள்.. இதைப் படிங்க..

இளைஞர்களிடையே சாகச சுற்றுலாக்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், இவர்கள் திறந்தவெளி முகாம்களில்  தங்கிச்செல்லவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை ஊக்குவிக்கும் பொருட்டு அதிகம் சாத்தியக்கூறுகள் உள்ள 10 இடங்கள் தேர்வு செய்து, சாகசச் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் திறந்தவெளி முகாம்கள் (Adventure and Eco Camping Sites) ஏற்படுத்தப்படும்.

முட்டுக்காட்டில் தமிழ்நாடு வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா படகு இல்லம் அமைந்துள்ளது. இப்படகு குழாமில் பல்வேறு வகையான படகுகள், வாட்டர் ஸ்கூட்டர்கள் மற்றும் விரைவுப் படகுகள் சுற்றுலாப் பயணிகள் யணம் செய்வதற்காக உள்ளன. இங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் படலில் பயணித்து அழகினை ரசிப்பதற்காக தமிழ்நாட்டில் முதல் முறையாக மிதவை படகுடன் கூடிய உணவகம் (Floating Restaurant)அமைக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தங்கும் விடுதிகளின் முன்பதிவுகள் இணையதன பயண நிறுவனங்களான MAKE MY TRIP, YATRA, GOIBI8O போன்ற நிறுவனங்களின் இணையதளத்தில் (Online Travel Aggregators) இடம்பெற செய்து அதிக வருவாய் ஈட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

                               

பிச்சாவரத்தில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகளை (Mangrove Forest) காண்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். மேலும் இச்சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்துதரும் வகையில் திறந்தவெளி முகாம், காட்சி கோபுரம், படகு குழாம், தங்கும் அறைகள் மற்றும் உணவகம் போன்றவை பிச்சாவரம் படகு குழாம் பகுதியில் மேம்படுத்தப்படும்.

ஓடியூர் ஏரியில் அமைந்துள்ள தீவுப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்றுவர இத்தீவுப்பகுதி அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், இங்கு நீர் விளையாட்டுகள் (Water Sports). கடற்கரை விளையாட்டுகள் (Beach play Activities), தேநீர் விடுதி போன்ற வசதிகளுடன் தங்கும் வசதி கொண்ட படகு இல்லம் ரூபாய் 50,00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு தரும் பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தும் விதமாக, உக்கடம் மற்றும் வாலாங்குளம் சரியில் படகு சவாரி மற்றும் இதர சுற்றுலா வசதிகளுடன் கூடிய புதிய படகு குழாம்கள் தமிழ்நாடு சுற்றுலர வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ஏற்படுத்தப்படும்.

Tamilnadu Tourism : படகு சவாரி, வள்ளுவர் சிலைக்கு ஒளியூட்டம்.. அடுத்தடுத்த அட்டகாச அறிவிப்புகள்.. இதைப் படிங்க..

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நீர்வீழ்ச்சியின் அழகை கண்டு ரசிக்க  பார்வையாளர் மாடம்,  நடைபாதை, பரிசல் நிறுத்துமிடம், எண்ணெய் குளியலுக்கான இடங்கள், சமையலறைக் கூடம், உடைமாற்றும் அறை போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். 

இயற்கை எழில் கொஞ்சும் நீரோடைகள் அருவிகள் உள்ள ஐவ்வாது மலையில் சுற்றுச்சூழலுடன் கூடிய தங்கும் இடங்கள் (Eco) Camping sites), பூங்காக்கள், பல்வேறு சாகச விளையாட்டுகளை ஏற்படுத்துதல்,பீமா  நீர்வீழ்ச்சி பகுதியை மேம்படுத்துதல், ஜமுனாமரத்தூர் ஏரியில் புதிய படகுக் குழாம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்” உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் அறிவித்தார்.   

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget