மேலும் அறிய

DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!

DMK Election: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் கூட்டணி இல்லாமல் திமுக ஆட்சி அமைத்ததே இல்லை என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

DMK Election: வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக திட்டமிட்டபடி, 200 தொகுதிகளில் வெற்றி பெறுமா என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

75 ஆண்டுகளை கடந்த திமுக

இன்னல்கள் பல கடந்து, 75 வருடங்களையும் தாண்டி திமுக தற்போது மீண்டும், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி அரியணையில் அமர்ந்துள்ளது. அண்ணாதுரை தொடங்கி, கருணாநிதியை தொடர்ந்து தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தலைவராக அந்த கட்சியை வழிநடத்தி வருகிறார். தமிழக அரசியலை திமுக இன்றி எழுதிவிடவே முடியாது என்ற அளவிற்கு அக்கட்சி முக்கிய பங்காற்றியுள்ளது. இந்நிலையில் தான், வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களை கைப்பற்றும் என அக்கட்சியினர் முழக்கமிட்டு வருகின்றனர். அதேநேரம், என்னதான் பழம்பெரும் கட்சியாக இருந்தாலும் திமுக இதுவரை ஒருமுறை கூட கூட்டணி கட்சிகளின் ஆதரவு இன்றி ஆட்சி அமைத்ததே இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும். 

234 தொகுதிகளிலும் ஜொலிக்காத திமுக

திமுகவில் இருந்து பிரிந்த பிறகு அதிமுக எனும் புதிய கட்சியை தொடங்கிய, எம்.ஜி.ஆர்., மூன்று சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொண்டு மூன்றிலும் வெற்றி பெற்று அடுத்தடுத்து முதலமைச்சரானார். ஆனால் பெற்றி பெற அவருக்கும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. வேறு வேறு சின்னங்களில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால், கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும்  அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே ஜெயலலிதா வேட்பாளர்களை களமிறக்கினார். அதற்கு முன்பு வரை எந்தவொரு அரசியல் கட்சியும் தமிழ்நாட்டில் இதனை சாத்தியப்படுத்தியதாக தெரியவில்லை. குறிப்பாக 75 ஆண்டுகளை கடந்த திமுகவால் கூட, 234 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் தற்போது வரை வேட்பாளர்களை நிறுத்த முடியாமல் வெற்றிக்காக கூட்டணி கட்சிகளின் உதவியை நாட வேண்டியுள்ளது.

திமுக ஆட்சியும் கூட்டணி கட்சிகளும் 

சட்டமன்ற தேர்தல் முதலமைச்சர் கூட்டணி கட்சிகள்
1967 அண்ணாதுரை (திமுக) சுவதிந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிரஜா சோசலிஸ்ட் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், சம்யுக்தா சோசலிஸ் கட்சி
1971 கருணாநிதி (திமுக) இந்திய கம்யூனிஸ்ட், ஆல் இந்தியா ஃபார்வர்ட் பிளாக், பிரஜா சோசலிஸ்ட் கட்சி, இந்தீய யூனியன் முஸ்லீம் லீக்
1989 கருணாநிதி (திமுக) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா தளம்
1996 கருணாநிதி (திமுக) தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஆல் இந்தியா ஃபார்வர்ட் பிளாக்
2006 கருணாநிதி (திமுக) காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்
2016 மு.க. ஸ்டாலின் (திமுக) மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ஆல் இந்த்யா ஃபார்வர்ட் பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை, காங்கிரஸ். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

200 தொகுதிகளில் சாத்தியமா?

இந்நிலையில் தான் 2026ம் ஆண்டில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என, அக்கட்சியினர் சூளுரைத்து வருகின்றனர். அதற்கு முதலில் இதே கூட்டணி நிலவ வேண்டும். அதேநேரம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2021ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆரம்பத்தில் அனைத்தும் நன்றாகவே இருந்தாலும், மாநில சட்ட-ஒழுங்கு என்பது இந்த ஆட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதிலும், திமுக நிர்வாகிகள் மீதே பல புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. குடும்ப அரசியல் கட்சி என பெயர்பெற்ற திமுகவிற்கு, மேலும் ஒரு கரும்புள்ளியாக முதல்முறையாக தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினின் புதல்வன் உதயநிதி தற்போது துணை முதலமைச்சர் பதவி வகித்து வருகிறார். அமைச்சர்களின் பேச்சு மற்றும் செயல்பாடு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கல்விக்கடன் மற்றும் நீட் தேர்வு ரத்து போன்ற பல தேர்தல் வாக்குறுதிகளும் கிடப்பில் போடப்பட்டதும், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பலவீனமாக அமையலாம் என்பதே நிதர்சனம்.

விஜயின் திட்டம்

இந்த சூழலில் தான் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மாநில அரசியலில் வேகமெடுத்து வருகிறது. தேர்தலில் வலுவான கூட்டணியை அமைப்பது எப்படி அவசியமோ, அதேபோன்று எதிரி அமைப்பின் கூட்டணியை பலவீனப்படுத்துவதும் அவசியம். அதனை உணர்ந்தே விசிகவை கொண்டு விஜய் காய் நகர்த்துவதாகவும், அது எதிர்பார்த்த பலனை தந்தால் திமுக கூட்டணியை உடைக்க முடியும் என அவர் நம்புவதாகவும் அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!Manmohan Singh Death | நவீன இந்தியாவின் சிற்பி.. மன்மோகன் சிங் காலமானார் | CongressAnna University Rape Issue | ”யார் அந்த சார்?”EA MALL-ல் நடந்தது என்ன? தமிழகத்தை அதிரவிடும் போஸ்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
பூசாரிக்கு ரூ. 18,000.. Soft இந்துத்துவாவை கையில் எடுத்த கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு செக்!
பூசாரிக்கு ரூ. 18,000.. Soft இந்துத்துவாவை கையில் எடுத்த கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு செக்!
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
பரபரப்பான மதுரை... செல்லூர் ராஜூ கைது
பரபரப்பான மதுரை... செல்லூர் ராஜூ கைது
Embed widget