மேலும் அறிய

Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை முகாமை மாவட்ட தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.

மருத்துவ முகாம்:

தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முகாமை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

முழு உடல் பரிசோதனை முகம்:

மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் முன்னிலை வகித்தார். மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர துப்புரப் பணியாளர்கள் 263 பேர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 347 என மொத்தம் 610 பேருக்கு ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், இசிஜி, எக்ஸ்ரே உட்பட முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் உடல் நலப் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான முழுமையான சிகிச்சையும் இலவசமாக அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராமசாமி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் லியோ,உதவி நிலை மருத்துவ அதிகாரி அருணா முத்து மகேஷ், டாக்டர் நல்லதம்பி மற்றும் மருத்துவக்குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.

செவிலியர் கண்காணிப்பாளர் மற்றும் செவிலியர் குழுவினர் தேவையான உதவிகளை செய்தனர். ஏற்பாடுகளை மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகர நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் பலர் செய்திருந்தனர்.

அதிகாரிகளுக்கு நன்றி:

உடல் பரிசோதனைகள் செய்து கொண்ட தூய்மை பணியாளர்கள் தரப்பில் கூறுகையில், வெளி மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு குறைந்தது ரூ. 10 ஆயிரம் ஆவது செலவாகும். ஆனால் மாநகராட்சி சார்பில் இந்த சிகிச்சைகளுக்கு ஆகும் அனைத்து செலவுகளும் எங்களுக்கு இலவசமாக செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஏற்பாடுகள் செய்த மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

இதில் உடல் நலக் குறைபாடு இருந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்த மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

இதையும் படிங்க:TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை

மேயர் பேசுகையில்..

இது குறித்து மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களின் பணி மகத்தான ஒன்று என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் நினைவு தினத்தில் பல்வேறு திட்டங்களை தூய்மை பணியாளர்களுக்காக முதல்வர் தொடக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை நடத்தி அவர்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாநகரத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இந்த முழு உடற் பரிசோதனை நடத்தப்படும். மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களின் ஆரோக்கியத்தில் மாநகராட்சி நிர்வாகம் எப்பொழுது சிறப்பு கவனம் செலுத்தும். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay's Next Political Move: அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
வெட்டி திண்ணை பேச்சா? புளித்து போன டயலாக் ஸ்டாலின்! – பக்கம் பக்கமாய் அறிக்கை விட்ட இபிஎஸ்!
வெட்டி திண்ணை பேச்சா? புளித்து போன டயலாக் ஸ்டாலின்! – பக்கம் பக்கமாய் அறிக்கை விட்ட இபிஎஸ்!
"கத்திக்குத்து உண்மையா.. இல்ல நடிக்கிறாரா" சைஃப் அலிகான் மீது பாஜக அமைச்சர் பரபர குற்றச்சாட்டு!
கிளாசில் இருந்து வெளியேறிய மாணவர்.. 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. பரபர சிசிடிவி
கிளாசில் இருந்து வெளியேறிய மாணவர்.. 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. பரபர சிசிடிவி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay's Next Political Move: அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
அரசியலில் ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் விஜய்... அடுத்த விசிட் பிளான் ரெடி...
வெட்டி திண்ணை பேச்சா? புளித்து போன டயலாக் ஸ்டாலின்! – பக்கம் பக்கமாய் அறிக்கை விட்ட இபிஎஸ்!
வெட்டி திண்ணை பேச்சா? புளித்து போன டயலாக் ஸ்டாலின்! – பக்கம் பக்கமாய் அறிக்கை விட்ட இபிஎஸ்!
"கத்திக்குத்து உண்மையா.. இல்ல நடிக்கிறாரா" சைஃப் அலிகான் மீது பாஜக அமைச்சர் பரபர குற்றச்சாட்டு!
கிளாசில் இருந்து வெளியேறிய மாணவர்.. 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. பரபர சிசிடிவி
கிளாசில் இருந்து வெளியேறிய மாணவர்.. 3ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. பரபர சிசிடிவி
Jio, Airtel New Plans: இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்...
இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்... புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஜியோ, ஏர்டெல்....
இதுதான் அந்த அறிவிப்பு; உலகுக்கே இரும்பை அறிமுகம் செய்த தமிழ்நாடு; ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
இதுதான் அந்த அறிவிப்பு; உலகுக்கே இரும்பை அறிமுகம் செய்த தமிழ்நாடு; ஆதாரம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்! குக்கரில் வெந்த மனைவி .. கொடூரனாக மாறிய கணவன்...
Embed widget