மேலும் அறிய

Simmam New Year Rasi Palan: சிம்மத்துக்கு ஜாக்பாட்! 2025 வருஷம் உங்களுக்கு இப்படித்தான் இருக்கும்!

2025 New Year Rasi Palan Simmam: சிம்மம் ராசியினருக்கு 2025ம் ஆண்டு எப்படி அமையப்போகிறது? என்ற முழு ராசிபலனை கீழே விரிவாக காணலாம்.

அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே  கர்ஜனையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த 2025 என்ன மாதிரியான பலன்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை பார்க்கலாம். கடந்த காலங்களில் வேலையில் மாற்றம், தொழிலில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை, சிலருக்கு  வேலை தொடர்பான சிக்கல்கள் கூட ஏற்பட்டு இருக்கலாம். அதே சமயத்தில்  குடும்பத்தோடு நேரம் செலவிடுவது, உறவினரோடு ஒரு இணக்கமான போக்கு போன்றவையும் தடைபட்டு இருக்க வாய்ப்புண்டு.   

குரு பெயர்ச்சி:

குருபகவான் பிப்ரவரி 7ம் தேதி வரை உங்களுடைய ராசிக்கு 9 ஆம் வீட்டில் பயணிக்கிறார். நல்ல இடம் என்றாலும் பிப்ரவரி ஏழுக்கு பிறகு உங்களுடைய ராசிக்கு  பத்தாம் வீட்டில் பயணிப்பதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம்...  ஏற்கனவே அப்படியான சூழ்நிலையிலும்  நீங்கள் இருக்கலாம்.  கவலை வேண்டாம்  எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பெரிய வாய்ப்புகளும். மற்றவர்களிடத்திலிருந்து பாராட்டுகளும் கிடைக்கப் போகிறது.

புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நீங்கள் புதிய காரியங்களில் ஈடுபட்டால், அது நிச்சயமாக வெற்றியை கொடுக்கும். சிம்ம ராசிக்கு தற்போது தேவை எல்லாம் நல்ல வருமானம் மட்டுமே.  மே மாதத்திற்கு பிறகு பெயர்ச்சியாகும் குரு பகவான் உங்களுக்கு  மிக சிறந்த யோகத்தையும் வருமானத்தையும் கொண்டு வந்து சேர்க்க போகிறார். லாப ஸ்தானத்தில் அமரும் குரு  உங்களுக்கு கேட்டதையும் கொடுப்பார், கேட்காததையும் கொடுப்பார்.  பண வரவினால் உங்களுடைய சேமிப்பு  நிச்சயமாக உயரும். உங்களை குறித்து ஏளனமாக பேசியவர்கள் கூட  உங்களுடைய சாதனைகளை கண்டு  நிச்சியம் பிரமிப்பார்கள்.  புதியதொரு காரியங்களை தொடங்கி அதன் மூலம் நீங்கள் யார் என்பதை வெளி உலகத்திற்கு காட்டுவீர்கள்.  ஐந்தாம் அதிபதி 11ஆம் வீட்டில் அமர்வது  புத்தி கூர்மையை பயன்படுத்தி மிகப்பெரிய சாதனைகளை செய்வது காட்டும்..   

எட்டாம் அதிபதியும் 11 ஆம் வீட்டிற்கு வருவது  திடீர் அதிர்ஷ்டத்தையும் தன வரவையும் உண்டாக்கும்.  யாரோ சம்பாதித்து சேர்த்து வைத்தது எல்லாம் ஒருவரின் கைக்கு வரும் அல்லவா? அப்படிப்பட்ட இடம்தான் எட்டு பதினொன்றாம் அதிபதிகளில் தொடர்பு. விபரீதமான ராஜயோகத்தை கொடுக்க கூடிய இப்படி ஒரு தொடர்பின் மூலம்  கமிஷன்  பெற்றுக்கொண்டு லாபம் பார்க்க விரும்புவர்களுக்கு இது ஒரு நல்ல காலம் தான்.

உங்களின் மூன்றாம் வீட்டை குரு பார்ப்பதால் எடுக்கின்ற காரியங்களில் ஜெயம் ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளோடு இணக்கமான சூழல் உருவாகும். ஏழாம் நாட்டை குரு பார்ப்பதால்  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். ஏழாம் பார்வையாக ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் குழந்தை பேரு உண்டாகும்...  நீண்ட நாள் காத்திருக்கின்ற சுப காரியங்களும் நடந்திரும்.

ராகு கேது பெயர்ச்சி:

சிம்ம ராசியை பொறுத்தவரை கேது இரண்டாம் இடத்திலும் ராகு எட்டாம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார். இது பெரிய வலுவான அமைப்பு இல்லை என்றாலும், குடும்பம் தொடர்பான சில ஏற்றத்தாழ்வுகளை கொடுத்து பின்னர் சரி செய்திருப்பார். தற்போது  ராகு கேது எங்கே பெயர்ச்சியாகுகிறார்கள், உங்களுடைய ராசிக்கு லக்னத்தில்  மற்றும்  ஏழாம் இடத்தில் வாழ்க்கை துணை தொடர்பான சிறு சங்கடங்களை கொடுத்தாலும் பெரிய அளவிற்கு பாதிப்பை உண்டாக்க மாட்டார்.

ஆன்மீகத்தில் மனம் சென்றால் அதை அப்படியே விட்டு விடுங்கள். காரணம்  பக்தி உங்களை சர்வ பிரச்சனைகளிலிருந்தும் காப்பாற்ற போகிறது. உடல் ரீதியான பிரச்சனைகளிலிருந்து மருத்துவத்தின் மூலம் தீர்வு ஏற்படக்கூடிய காலகட்டம்.  உடலில் என்ன சிக்கல் இருக்கிறது என்று தெரியவில்லை என்று எண்ணியிருப்பவர்களுக்கு ராகு கேதுக்கள் அறுவை சிகிச்சை மூலமாக நல்ல தீர்வுகளை கொடுப்பார்கள்.

செவ்வாயின் பலம்:

செவ்வாய் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் அமர்ந்து நீச்சகதியில் நல்ல ராஜயோகத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். வருடத்தின் பாதி வரை செவ்வாய் 12ஆம் வீட்டில் அமர்ந்து கஷ்டங்களைக் கொண்டு வந்தாலும், வருடத்தின் பிற்பகுதியில் ராசியிலேயே அமர்ந்து பெரிய மாற்றத்தையும் நல்ல சக்தியையும் கொடுக்கப் போகிறார். எதிர்பார்த்து இருந்த நல்ல வேலை உங்களுக்கு அமையும். வீடு மனை வாகனம் போன்றவை உங்களுக்கு சாதகமாக முடியும்.. எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (14-08-2026): வெள்ளிக்கிழமை தனுசு ராசிக்கும் கொட்டப்போகும் லாபம்.. அப்ப உங்க ராசிக்கு? .. பலன்கள் இதோ!
Rasi Palan Today (14-08-2026): வெள்ளிக்கிழமை தனுசு ராசிக்கும் கொட்டப்போகும் லாபம்.. அப்ப உங்க ராசிக்கு? .. பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget