TN Rain Alert: வானிலை அலர்ட்.. அடுத்த 3 மணிநேரத்தில் 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு..
TN Rain Alert: தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்தில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட 21 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்தில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பளநிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பாறி, இன்று (14.09.2023) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஓரிசா - மேற்கு வங்காள பகுதிகளில் நிலவுகிறது.இது அடுத்த இரண்டு தினங்களில் ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
14.09.2023:
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.09. 2023
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னனுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16.09.2023 மற்றும் 17.09.2023
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னதுடன் கூடிய லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18.09.2023 / 20.09.2023
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை எட்டியும் இருக்கக்கூடும்.
மேலும் வாசிக்க..