மேலும் அறிய

TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?

TN Rain Alert: தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களை காணலாம்.

தமிழ்நாட்டில் டிசம்பர் 16ஆம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி:

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று (15.12.2024) உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இது அடுத்து 24 மணி நேரத்தில் வலுவடைந்து தமிழ்நாட்டை நோக்கி நகரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

15-12-2024 மற்றும் 16-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17-12-2024: கடலோர தமிழகத்தின் ஒருசில  இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர். புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

18-12-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை. ராணிபேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

19-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம். ராணிபேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 20-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: “2-வது ரவுண்ட் சுற்றுப்பயணம் முடிஞ்சு இபிஎஸ் தனியா பஸ்சுல வந்தாலும் வருவாரு“; உதயநிதி ஸ்டாலின் அட்டாக்
“2-வது ரவுண்ட் சுற்றுப்பயணம் முடிஞ்சு இபிஎஸ் தனியா பஸ்சுல வந்தாலும் வருவாரு“; உதயநிதி ஸ்டாலின் அட்டாக்
TVK Vijay: வீக் எண்டில் ஊர்வலம் வர திட்டம்.. வீக்கான பொலிடீசியனா விஜய்? - சிஎம் சீட்டிற்கு இந்த உழைப்பு போதுமா?
TVK Vijay: வீக் எண்டில் ஊர்வலம் வர திட்டம்.. வீக்கான பொலிடீசியனா விஜய்? - சிஎம் சீட்டிற்கு இந்த உழைப்பு போதுமா?
TNTET: இன்றே கடைசி; டெட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?- 4 லட்சத்தை நெருங்கிய விண்ணப்பம்!
TNTET: இன்றே கடைசி; டெட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?- 4 லட்சத்தை நெருங்கிய விண்ணப்பம்!
Stellantis EV: இந்தியாவிற்கு வரும் புதிய கார் - 975 கிமீ ரேஞ்சில் மின்சார எஸ்யுவி - மிரட்டப்போகும் சீன பிராண்ட்
Stellantis EV: இந்தியாவிற்கு வரும் புதிய கார் - 975 கிமீ ரேஞ்சில் மின்சார எஸ்யுவி - மிரட்டப்போகும் சீன பிராண்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kajal Agarwal : காஜல் அகர்வால் மரணம்?ஷாக்கில் ரசிகர்கள் உண்மை பின்னணி!
மல்லை சத்யா நிரந்தர நீக்கம்! ”ரொம்ப தப்பு பண்ணிட்ட” தூக்கியடித்த வைகோ
ஏர்போர்ட் மூர்த்தி கைது! இரவோடு இரவாக தூக்கிய POLICE! DGP அலுவலகம் முன் கைகலப்பு
செங்கோட்டையன் டெல்லி விசிட்! பாஜகவினருடன் முக்கிய MEETING? அடுத்த ப்ளான் என்ன?
Sexual Harassment | மாணவிக்கு பாலியல் சீண்டல் சிக்கிய தலைமை ஆசிரியர்! பணியிடை நீக்கம் செய்து அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: “2-வது ரவுண்ட் சுற்றுப்பயணம் முடிஞ்சு இபிஎஸ் தனியா பஸ்சுல வந்தாலும் வருவாரு“; உதயநிதி ஸ்டாலின் அட்டாக்
“2-வது ரவுண்ட் சுற்றுப்பயணம் முடிஞ்சு இபிஎஸ் தனியா பஸ்சுல வந்தாலும் வருவாரு“; உதயநிதி ஸ்டாலின் அட்டாக்
TVK Vijay: வீக் எண்டில் ஊர்வலம் வர திட்டம்.. வீக்கான பொலிடீசியனா விஜய்? - சிஎம் சீட்டிற்கு இந்த உழைப்பு போதுமா?
TVK Vijay: வீக் எண்டில் ஊர்வலம் வர திட்டம்.. வீக்கான பொலிடீசியனா விஜய்? - சிஎம் சீட்டிற்கு இந்த உழைப்பு போதுமா?
TNTET: இன்றே கடைசி; டெட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?- 4 லட்சத்தை நெருங்கிய விண்ணப்பம்!
TNTET: இன்றே கடைசி; டெட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?- 4 லட்சத்தை நெருங்கிய விண்ணப்பம்!
Stellantis EV: இந்தியாவிற்கு வரும் புதிய கார் - 975 கிமீ ரேஞ்சில் மின்சார எஸ்யுவி - மிரட்டப்போகும் சீன பிராண்ட்
Stellantis EV: இந்தியாவிற்கு வரும் புதிய கார் - 975 கிமீ ரேஞ்சில் மின்சார எஸ்யுவி - மிரட்டப்போகும் சீன பிராண்ட்
Fact Check: தமிழ்வழி மாணவர்களை விட இந்தி பிரச்சார சபாவில் அதிக மாணவர்கள்? உண்மை என்ன?
Fact Check: தமிழ்வழி மாணவர்களை விட இந்தி பிரச்சார சபாவில் அதிக மாணவர்கள்? உண்மை என்ன?
Russia Vs NATO: போலந்திற்குள் புகுந்த ரஷ்ய ட்ரோன்கள்; நடவடிக்கை எடுக்குமா நேட்டோ.? - விரிவடையும் உக்ரைன் போர்?
போலந்திற்குள் புகுந்த ரஷ்ய ட்ரோன்கள்; நடவடிக்கை எடுக்குமா நேட்டோ.? - விரிவடையும் உக்ரைன் போர்?
INDIA US Trade: முட்டி மோதிட்டேன் முடியல.. ”இந்தியா மேல 100% வரி போடலாம்” - ட்ரம்ப்பின் தூது, சூது திட்டம்
INDIA US Trade: முட்டி மோதிட்டேன் முடியல.. ”இந்தியா மேல 100% வரி போடலாம்” - ட்ரம்ப்பின் தூது, சூது திட்டம்
பொறுத்தது போதும் பொங்கி எழுந்த மாதம்பட்டி ரங்கராஜ்..ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மனுதாக்கல்
பொறுத்தது போதும் பொங்கி எழுந்த மாதம்பட்டி ரங்கராஜ்..ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மனுதாக்கல்
Embed widget