TN Rain Alert: 10-ம் தேதி வரை மழை இருக்கு;எங்கெல்லாம் தெரியுமா? வானிலை அப்டேட்!
TN Rain Alert: தமிழ்நாட்டில் வரும் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று(04.12.2024 ) மற்றும் நாளை (05.12.2024) தமிழ்நாடு, புதுச்சேரியின் ஒருசில பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை விவரம்:
04-12-2024:
தமிழகத்தில் கத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05-12-2024 முதல் 09-12-2024 வரை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 4, 2024
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் மீள தொடங்கியுள்ளன. இதற்கிடையே திருவண்ணாமலையில் மலைச்சரிவு ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாது, பெரும் மழை இருக்காது, தென் மாவட்டங்களை தாக்கும் என, மாறி மாறி வானிலை எச்சரிக்கைகள் வெளியாகின. இருந்தாலும் பாதிப்புகள் இருந்தன. இந்நிலையில், அடுத்த வாரம் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சுயாதீன வானிலை கண்காணிப்பாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. அடுத்த வாரம்தான் என்ன நிலை என்று தெரியும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத அளவு மழை பதிவாகியிருக்கிறது.