மேலும் அறிய

Tamil Nadu NEET Exam 2021 : ’நீட் பாதிப்பு பற்றி ஏ.கே.ராஜன் கமிட்டிக்கு மெயில் அனுப்புகிறேன்’ - நடிகர் சூர்யா!

ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க 'ஒரே தேர்வு முறை' என்பது சமூக நீதிக்கு எதிரானது - நடிகர் சூர்யா

நீட் தகுதித் தேர்வு குறித்து ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு நிறுவியுள்ள நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு அகரம் சார்பாக நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்துப் பதிவு செய்யப்படும் என நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். மேலும் அரசு விளம்பரப்படுத்தியுள்ள neetimpact2021@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு வருகின்ற ஜூன் 23-ஆம் தேதிக்குள் மக்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில், 
'அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு 'கல்வியே ஆயுதம்'. ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க 'ஒரே தேர்வு முறை' என்பது சமூக நீதிக்கு எதிரானது.

எளிய குடும்பத்தினர் கல்வி பெற ஆதாரமாக இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் முறையே 40% மற்றும் 25% மாணவர்களில் 20% மாணவர்களே உயர்கல்விகளுக்கு செல்கின்றனர். தங்கள் எதிர்காலத்திற்காக 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி படித்த பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வித் தளத்தில் அவர்களை பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி. 'நீட் நுழைவுத்தேர்வு' வைக்கப்படுவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது. அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை.

தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழு, ‘நீட் தேர்வின்' பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுடன் இணைந்து பயணிக்கிற அகரம் ஃபவுண்டேஷன், மாணவர்களுக்கான பாதிப்புகளை முறையாக அக்குழுவிடம் பதிவு செய்கிறது.

Tamil Nadu NEET Exam 2021 : ’நீட் பாதிப்பு பற்றி ஏ.கே.ராஜன் கமிட்டிக்கு மெயில் அனுப்புகிறேன்’ - நடிகர் சூர்யா!

நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய, 'நீட் தேர்வின்' பாதிப்பின் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்தவேண்டும். மாணவர்களும், அவர்தம் குடும்பங்களும் அனுபவிக்கிற துயரங்களைத் தவறாமல் நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழுவிடம், neetimpact2021@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு வருகின்ற ஜூன் 23-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில், கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். அது ஒன்றே, நிரந்தர தீர்வு, 'கல்வி மாநில உரிமை' என்கிற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக வரும் 23ம் தேதிக்குள் நீட் தேர்வு தொடர்பான கருத்துக்களை  பொதுமக்கள் சமர்பிக்கலாம் என நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு தெரிவித்திருந்தது. 

இதுதொடர்பாக  வெளியிடப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில், "தமிழ்நாடு அரசால் நீட் தேர்வின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்கள் தங்களின் கருத்துரைகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மருத்துவக் கல்வி இயக்குநகரத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப் பெட்டியில், வரும் 23.06.2021க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தது. 

Also Read: நீட் தேர்வு: பொதுமக்கள் கருத்துக்களை அனுப்பலாம் -உயர்நிலைக்குழு அறிவிப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RBI On Kotak Mahindra Bank: ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
Breaking Tamil LIVE: 14 மாவட்டங்களில் வெப்ப அலை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்..
Breaking Tamil LIVE: 14 மாவட்டங்களில் வெப்ப அலை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்..
Vishal: “வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” -  விஷாலுக்கு என்ன ஆச்சு?
“வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” - விஷாலுக்கு என்ன ஆச்சு?
Exclusive: ”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடிKoovagam Festival 2024 | கட்டிய தாலியை அறுத்து கதறி அழுத திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாKanimozhi Slams Modi | ”மோடிக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பு” கடுமையாக சாடிய கனிமொழிKanimozhi Speech | ”அம்பேத்கர் படத்தை சுற்றி காவி நிற தேள்கள்” கனிமொழி ஆதங்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RBI On Kotak Mahindra Bank: ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
Breaking Tamil LIVE: 14 மாவட்டங்களில் வெப்ப அலை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்..
Breaking Tamil LIVE: 14 மாவட்டங்களில் வெப்ப அலை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்..
Vishal: “வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” -  விஷாலுக்கு என்ன ஆச்சு?
“வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” - விஷாலுக்கு என்ன ஆச்சு?
Exclusive: ”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
Madurai: ஒரே வாரத்தில் சிதிலமடைந்த சாலை ; அவல நிலையால் மக்கள் அதிருப்தி
ஒரே வாரத்தில் சிதிலமடைந்த சாலை ; அவல நிலையால் மக்கள் அதிருப்தி
வீடு கட்டுவதில் பிரச்சினை: மகனை மரத்தில் கட்டி வைத்து அடித்த தந்தை - உயிரிழந்த மகன்
வீடு கட்டுவதில் பிரச்சினை: மகனை மரத்தில் கட்டி வைத்து அடித்த தந்தை - உயிரிழந்த மகன்
Nainar Nagendran: எனக்கு நிறைய பேரை தெரியும் அதுக்காக அது என்னுடைய பணம் ஆகிடுமா? - நயினார் நாகேந்திரன்
எனக்கு நிறைய பேரை தெரியும் அதுக்காக அது என்னுடைய பணம் ஆகிடுமா? - நயினார் நாகேந்திரன்
Tamannaah Bhatia: ஐபிஎல் சட்டவிரோத ஒளிபரப்பு வழக்கு.. சிக்கலில் நடிகை தமன்னா.. சம்மன் அனுப்பிய போலீசார்!
ஐபிஎல் சட்டவிரோத ஒளிபரப்பு வழக்கு.. சிக்கலில் நடிகை தமன்னா.. சம்மன் அனுப்பிய போலீசார்!
Embed widget