மேலும் அறிய

NEET Exam 2021: நீட் தேர்வு: பொதுமக்கள் கருத்துக்களை அனுப்பலாம் -உயர்நிலைக்குழு அறிவிப்பு

பொது மக்கள் தங்களின் கருத்துரைகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ , வரும் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 23ம் தேதிக்குள் நீட் தேர்வு தொடர்பான கருத்துக்களை  பொதுமக்கள் சமர்பிக்கலாம் என நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக  வெளியிடப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில், "தமிழ்நாடு அரசால் நீட் தேர்வின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்கள் தங்களின் கருத்துரைகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மருத்துவக் கல்வி இயக்குநகரத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப் பெட்டியில், வரும் 23.06.2021க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும், neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் கருத்துக்கள் அனுப்பி வைக்கலாம். 

NEET Exam 2021: நீட் தேர்வு: பொதுமக்கள் கருத்துக்களை அனுப்பலாம் -உயர்நிலைக்குழு அறிவிப்பு

சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வு முறையானது பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஆராய  ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. இராஜன் தலைமையில், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழுவை முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னதாக அமைத்தார். 

NEET : நீட் தேர்வை ரத்துசெய்வது திமுக அரசுக்கு சாத்தியமா? எப்படி?

இந்த குழுவில்,டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டாக்டர் ஜவஹர் நேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை அரசு செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், மருத்துவ கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குனரும், தேர்வுக்குழு செயலாளரும் உறுப்பினராகவும் -  ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.        


NEET Exam 2021: நீட் தேர்வு: பொதுமக்கள் கருத்துக்களை அனுப்பலாம் -உயர்நிலைக்குழு அறிவிப்பு

பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், நீட் தேர்வு முறைக்கு மாற்றாக மாணவர் சேர்க்கை முறைகளை வகுப்பது தொடர்பான பரிந்துரைகளையும் இக்குழு அரசுக்கு வழங்கும். 

முடிவுக்கு வருமா நீட்? ஏ.கே ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைப்பு

முன்னதாக, செய்தியார்களிடம் பேசிய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. இராஜன்,“ நீட் தேர்வு குறித்த முக்கியமான தரவுகள் தேவைப்படுகின்றன. தமிழ்வழிக்கல்வி மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வு செய்து தரவுகளின் வழி அறிக்கை தாக்கல் செய்வோம். குழுவில் உள்ள உறுப்பினர்கள் எல்லாருடைய கருத்தும் நீட் தேர்வால் பாதிப்பு இருக்கிறது என்பதுதான். பாதிப்பு இல்லை என்று சொல்ல முடியாது. பாதிப்பு இருப்பதால்தான் அரசு குழு அமைத்திருக்கிறது. எவ்வளவு தூரம் பாதிப்பு என்பதைத்தான் நாங்கள் ஆய்வு செய்வோம். ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிப்போம்" என்று தெரிவித்தார்.  

Tamil Nadu NEET 2021 Exam: நீட் தேர்வு ரத்தாகாது என்பது திமுகவிற்கு தெரியும் -எல்.முருகன்

தலைப்பு செய்திகள்

ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Embed widget