மேலும் அறிய

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!

பெரியார் நகர், திரு.வி.க.நகர், முல்லை நகர், அம்பத்தூர் ஆர்கேநகர் போன்ற 7 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் வடிவமைக்கின்ற பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் 18 புதிய பேருந்து நிலையங்கள் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு  ஆய்வு செய்தார்.

முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம்:

முன்னதாக பெரியார் நகரில் செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தின் 95 சதவீத பணிகள் நிறைவுற்றுள்ளது. முதலமைச்சர் தொகுதியில் கட்டப்பட்டு வரும் பெரியார் நகர் பேருந்து நிலையம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்.

பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கக்கூடிய மக்களுக்கு உதவி புரிகிற வகையில் அரசின் சார்பில் பயன்படுத்துகின்ற பெரியதுறையாக போக்குவரத்து துறை உள்ளது. அந்த வகையில், முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மாதவரம் பேருந்து நிலையத்தை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி தற்போது விழா காலங்களிலும் கூட அந்த பேருந்து நிலையம் அதிகளவு பயணிகள் பயன்படுத்துகின்ற அளவிற்கு ஒரு நல்ல தரத்தோடு இன்று செயல்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கம்  பேருந்து நிலையம் கடந்த காலத்தில் துவங்கப்பட்டிருந்தாலும் அதிமுக ஆட்சியில் சரியான திட்டமிடல்  இல்லாததால் புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு பயணிகளின் தேவைகளை கேட்டு அறிந்து அனைத்து தேவைகளையும் முழுமையாக நிறைவேற்றி தொடர்ந்து வருகின்ற காலங்களில் அந்தப் பேருந்து நிலையத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று கணக்கிட்டு கட்டமைப்புகளை உருவாக்குகின்ற பணி முழுமையாக ஈடுபட்டிருக்கிறது.

அமைச்சர் சேகர் பாபு சொன்ன சூப்பர் தகவல்:

ஆம்னி பேருந்து நிலையத்தை கட்ட வேண்டும் என்ற திட்டமிட்டு 42 கோடி செலவில் ஆம்னி பேருந்து நிலையம் முடிச்சூரில் 95 சதவீத பணிகள் நிறைவுற்று உள்ளது கூடிய விரைவில் தமிழக முதல்வர் அவர்களால் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த காலங்களில் பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்த பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி தொடர் ஆய்வினை மேற்கொண்டு பயணிகளின் தேவைக்கிற்காக பல்வேறு புதிய கட்டமைப்புகளை உருவாக்கி மார்ச் மாதத்தில் அந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

பெரியார் நகர், திரு.வி.க.நகர், முல்லை நகர், அம்பத்தூர் ஆர்கேநகர் போன்ற 7 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் வடிவமைக்கின்ற பணி நடைபெற்று வருகிறது. பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளோடு பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் தொகுதியில் தற்போது கட்டப்பட்டு வரும் பெரியார் நகர் பேருந்து நிலையம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மாமல்லபுரத்தில் ஒரு பேருந்து நிலையம், செங்கல்பட்டில் ஒரு பேருந்து நிலையம் புதிய கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது, 18 புதிய பேருந்துகள் கட்டமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2025 டிசம்பருக்குள் 18 பேருந்து நிலையங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

வடசென்னையில் கட்டப்பட்டு வரும் 7 புதிய பேருந்து நிலையங்களும் அடுத்தாண்டு டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும். உலக தரத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இருக்கிறது என்று விமர்சனம் செய்தவர்கள் கூட தற்பொழுது புகழ்ந்து பேசுகிறார்கள்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai Vintage bus: கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற கட்டணம் இவ்வளவு தானா.? சிறப்பம்சம் என்ன.?
கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற கட்டணம் இவ்வளவு தானா.? சிறப்பம்சம் என்ன.?
Iran Trump Russia Warning: ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
Tata Sierra Finance Plan: டாடா சியாரா வாங்க பிளான் பண்றீங்களா.? எவ்வளவு முன்பணம் கட்டணும் தெரியுமா.? EMI எவ்வளவு வரும்.?
டாடா சியாரா வாங்க பிளான் பண்றீங்களா.? எவ்வளவு முன்பணம் கட்டணும் தெரியுமா.? EMI எவ்வளவு வரும்.?
Maruti Fronx No.1: காம்பேக்ட் SUV பிரிவில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி ஃப்ராங்க்ஸ்; டாடா, ஹுண்டாயின் நிலை என்ன.?
காம்பேக்ட் SUV பிரிவில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி ஃப்ராங்க்ஸ்; டாடா, ஹுண்டாயின் நிலை என்ன.?
Embed widget