மேலும் அறிய

Tamil Nadu lockdown | தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு: கட்டுப்பாடுகள் என்னென்ன?

தமிழகத்தில் முழு நேர ஊரடங்கு இன்று முதல் அமலானது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. இருந்தும் தொற்று எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் முழு நேர ஊரடங்கு இன்று முதல் அமலானது.

மே 10ம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24 ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த முழு ஊரடங்கில் எதெற்கெல்லாம் அனுமதி? எதெற்கெல்லாம் தடை பார்க்கலாம்.

Tamil Nadu lockdown | தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு: கட்டுப்பாடுகள் என்னென்ன?

*மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை தொடரும்

*வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் விமானம் மற்றும் ரயிலில் வருவோரை கண்காணிக்க இபதிவு முறை தொடரும்

*தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் ஏசி வசதியின்றி பகல் 12 மணி வரை இயங்கலாம். 50 சதவீதம் வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்கலாம்

*மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி, மீன் வினியோகம் செய்ய பகல் 12 மணி வரை அனுமதி

*மளிகை, காய்கறிகள், இறைச்சி, பலசரக்கு, மீன் கடைகள் தவிர வேற கடைகள் திறக்க அனுமதியில்லை

*முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது

Tamil Nadu lockdown | தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு: கட்டுப்பாடுகள் என்னென்ன?

*ஓட்டல்களில் பார்சல் வழங்க அனுமதி. டீ கடைகள் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி

*தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதியில்லை. மருத்துவ பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்படலாம்

*உள் அரங்குகள், திறந்த வெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்களுக்கு தடை

*ஏற்கனவே அறிவித்த இறப்பு நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை

*மாநிலம் முழுவதும் சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை

*கோயம்பேடு சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட தடை தொடர்கிறது

*தலைமை செயலகம், மருத்துவத்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, காவல் துறை, ஊர்காவல்படை. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர் உள்ளாட்சி துறை, வனத்துறை , கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை தவிர மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் செயல்படாது. 

*மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே அனைத்து போக்குவரத்திற்கு தடை. அத்தியாவசிய தேவைக்கு ஆவணத்துடன் பயணிக்கலாம். 

*அனைத்து தனியார் அலுவலங்கள் மற்றும் நிறுவனங்கள் இயங்க தடை

*வழிபாட்டு தலங்களுக்கான தடை தொடர்கிறது

*சுற்றுலாத் தலங்கள் செல்லவும் தடை தொடர்கிறது

*பள்ளிகள், கல்லூரிகள், கோடை கால முகாம்களுக்கு அனுமதியில்லை

எதற்கெல்லாம் அனுமதி?

*பால் வினியோகம், நாளிதழ் வினியோகம், தனியார் விரைவுத் தபால், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகள், அனைத்து சரக்கு வாகன போக்குவரத்து, விளை பொருள் எடுத்துச் செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி

*ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்கும்

*நீதித்துறை நீதிமன்றங்கள் செயல்படும்

*கட்டடப் பணிகளுக்கு அனுமதி

*ஊடக பணியாளர்களுக்கு அனுமதி

Tamil Nadu lockdown | தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு: கட்டுப்பாடுகள் என்னென்ன?

*பெட்ரோல், டீசல் பங்குகள் அனுமதி

*வங்கிகள், ஏடிஎம், வங்கி சார்ந்த போக்குவரத்து 50 சதவீத பணியாளர்களுடன் அனுமதி

இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்ப தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ள நிலையில், ஊரடங்கை மீறி உலா வரும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டாம் என்றும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
உங்க அப்பாவுக்கு மட்டும்தான் சிலை வைப்பீங்களா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
"மக்கள் இதை வேடிக்கை பார்க்க மாட்டாங்க" தவெகவினர் கைது.. கொதித்தெழுந்த விஜய்!
CMCHIS Scheme: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் பெறுவது எப்படி ?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
147 வருஷ வரலாறு! இவங்கதான் கிரிக்கெட்டின் உண்மையான GOAT - ஏன் தெரியுமா?
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
Vidaamuyarchi: அஜித்தை வச்சு கல்லா கட்ட ஸ்கெட்ச்! வசூலை லம்பா அள்ள லைகா விடாமுயற்சி!
"ராகுல் காந்திக்கு வாக்களித்த அனைவரும் தீவிரவாதிகள்" மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்!
Crime: பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
பாஜக பிரமுகர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்... 10ம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் கைது
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Embed widget