மேலும் அறிய

‛வெள்ளை அறிக்கை... வெள்ளை அறிக்கை...’ எதற்கெடுத்தாலும் வெள்ளையறிக்கை’ அப்படினா என்ன?

தமிழகத்தின் நிதிநிலை கவலைக்குரியதாக இருக்கும் நிலையில் ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ள நிலையில் வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்பதை விளக்குகிறது இக்கட்டுரை!

வெள்ளை அறிக்கையும் எதிர்க்கட்சிகளும்

உலகம் முழுவதும் ஆளும்கட்சிகளை திணறடிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தையாக வெள்ளை அறிக்கை என்ற சொல் உள்ளது. அரசின் நடவடிக்கை குறித்து பேட்டி அளிக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக ’’ஒரு வெள்ளை அறிக்கை’யை வெளியிட வேண்டும் என்று பேசுவதை நாம் பலமுறை கேட்டிருப்போம்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என கடந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வெள்ளை அறிக்கை மட்டும் போதுமா? அல்லது அதனுடன் சேர்ந்து பச்சை, மஞ்சள் அறிக்கையுடன் வெள்ளரிக்காயும் சேர்த்து கொடுப்போம் என தெரிவித்திருந்ததை அவ்வுளவு விரைவில் மறந்திருக்க முடியாது. வெள்ளை அறிக்கைக்கு பின்னால் இருக்கும் வரலாற்றை சற்றே நாம் திரும்பி பார்ப்போம்.

வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

வெள்ளை அறிக்கை என்ற பெயர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். வெள்ளை அறிக்கை என்பது ஒரு ஜனநாயக கருவி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளை அறிக்கையை அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் வெளியிட முடியாது.

வெள்ளை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றியோ அல்லது பிரச்னைகள் பற்றியோ முழுமையாக தெரிவிக்கும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இந்த ஆவணத்தில் குறிப்பிட்ட சிக்கல் குறித்தோ அல்லது பொருள் குறித்தோ நிபுணரின் தீர்வும் பரிந்துரையும் கொண்டதாக இருக்கும். ஒரு சிக்கலை புரிந்து கொள்ளவோ, சிக்கலை தீர்க்கவோ, அல்லது முடிவெடுக்கவோ வெள்ளை அறிக்கை வழிவகை செய்கிறது

இந்த ஆவணத்தின் வெளிப்புற பக்கங்கள் வெள்ளை நிறத்தால் இருக்கும் என்பதால் இதற்கு வெள்ளை அறிக்கை என பெயர் வந்தது.

வெள்ளை அறிக்கை எப்படி இருக்க வேண்டும்

வெள்ளை அறிக்கையில் பேசப்படும் பொருள் குறித்த விளக்கங்கள் தரவு வாரியாகவும் புள்ளி விவரங்களை எளிமையான தொனியில் விளக்கும் விதமாகவும் இருக்க வேண்டியது அவசியம்

வெள்ளை அறிக்கை குறிப்பிடும் பிரச்னைகள் மீது அரசாங்கம் எடுத்திருந்த எல்லா நடவடிக்கைகளின் பட்டியல்களும் அதில் இடம் பெற்றிருத்தல் வேண்டும்

தொடர்புடைய ஒரு பிரச்னையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அதிகாரப்பூர்வ விளக்கமாக இருக்கும், வெள்ளை அறிக்கை வெளியிட்ட அமைப்பின் தெளிவான குறிக்கோளை மக்கள் அறிந்து கொண்டு விவாதிக்கவோ, ஆலோசிக்கவோ முடியும்.

வெள்ளை அறிக்கை மக்களிடையே அரசின் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க உதவுகிறது. வெள்ளை அறிக்கை ஒரு பிரச்னைக்கு தீர்வாக அல்லது புதிய திட்டத்தை அறிமுகம் செய்வதற்காக வெளியிடப்படுகிறது.

பச்சை அறிக்கை

வெள்ளை அறிக்கையை போலவே பச்சை அறிக்கை என்ற பதமும் வழக்கத்தில் உள்ளது ஒரு பொருள் தொடர்பாகவோ அல்லது ஒரு பிரச்னைகள் தொடர்பாகவோ தீர்வை உண்டாக்க இறுதி முடிவு எடுக்கப்படாத பல்வேறு நபர்களின் ஆலோசனைகளை கொண்ட தொகுப்புக்கு பச்சை அறிக்கை என்று அழைக்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs DC LIVE Score: விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் டெல்லி..நிதானமாக விளையாடும் ராஜஸ்தான் அணி!
RR vs DC LIVE Score: விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் டெல்லி..நிதானமாக விளையாடும் ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR VS DC: டாஸ் வென்ற டெல்லி..பந்து வீச்சு தேர்வு! அதிரடி ஆட்டத்தை தொடங்குமா ராஜஸ்தான்?
IPL 2024 RR VS DC: டாஸ் வென்ற டெல்லி..பந்து வீச்சு தேர்வு! அதிரடி ஆட்டத்தை தொடங்குமா ராஜஸ்தான்?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs DC LIVE Score: விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் டெல்லி..நிதானமாக விளையாடும் ராஜஸ்தான் அணி!
RR vs DC LIVE Score: விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் டெல்லி..நிதானமாக விளையாடும் ராஜஸ்தான் அணி!
IPL 2024 RR VS DC: டாஸ் வென்ற டெல்லி..பந்து வீச்சு தேர்வு! அதிரடி ஆட்டத்தை தொடங்குமா ராஜஸ்தான்?
IPL 2024 RR VS DC: டாஸ் வென்ற டெல்லி..பந்து வீச்சு தேர்வு! அதிரடி ஆட்டத்தை தொடங்குமா ராஜஸ்தான்?
Lok Sabha Election: ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே!  ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
ஓட்டு போட ரெடியா இருங்க மக்களே! ஏப்ரல் 19 விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது!அதிமுக ஒரு வீணாப்போன கட்சி - அமைச்சர் எ.வ.வேலு
Thalaivar 171 Title: லோகேஷின் டைம் டிராவல் கதையில்  கைதியாக ரஜினி! தலைவர் 171 டைட்டில் அப்டேட்!
Thalaivar 171 Title: லோகேஷின் டைம் டிராவல் கதையில் கைதியாக ரஜினி! தலைவர் 171 டைட்டில் அப்டேட்!
புது சர்ச்சை! அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அ.தி.மு.க., நாம் தமிழர் கோரிக்கை - ஏன்?
புது சர்ச்சை! அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அ.தி.மு.க., நாம் தமிழர் கோரிக்கை - ஏன்?
Actor Govinda: அரசியலில் 2ஆவது இன்னிங்ஸ்.. ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா!
ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்.. மகாராஷ்டிரா அரசியலில் ட்விஸ்ட்!
Suriya 44: கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
கார்த்திக் சுப்புராஜுடன் கைகோர்த்த சூர்யா! வெளியான செம்ம அப்டேட் - ரசிகர்களுக்கு சப்ரைஸ்!
Embed widget