TN Headlines Today: 3 மணி வரையிலான முக்கியச் செய்திகளின் ரவுண்டப் இதோ..!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என அறிவுறுத்தவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ஆர்.பி.ஐ அறிவித்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என அறிவுறுத்தவில்லை என்றும், முற்றிலும் தவறான செய்தி பரப்பப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் வாசிக்க..
- மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி
தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 முக்கிய பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய “மதி எக்ஸ்பிரஸ்” என்ற பெயரில் வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படுகிறது.மேலும் வாசிக்க..
- 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப்பெறுதல் அறிவிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரியாக்சன்
கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப்பெறுதல் அறிவிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது. புதிதாக 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது மக்கள் தங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கி வாசலில் நீண்ட வரிசைகளில் நின்றனர். இதனால் வயதானவர்கள், திருமணம் போன்ற விசேஷங்களை வைத்திருந்தவர்கள் ஆகியோர் பெரிதும் அவதி அடைந்தனர். இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.மேலும் வாசிக்க..
- தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும.
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தேர்வு எழுதிய 9,14,320 மாணவ, மாணவியர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர்கள் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேலும் வாசிக்க..
- இன்றைய வானிலை அறிவிப்பு
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்றும் நாளையும் 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் வாசிக்க..