Anbil Mahesh: தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.
![Anbil Mahesh: தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் School Education Minister Anbil Mahesh Poiyamozhi has asked the parents to encourage the students who have failed in the examination Anbil Mahesh: தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/19/411f2bf15dbad8500d9c74cbc4a233651684493091300333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தேர்வு எழுதிய 9,14,320 மாணவ, மாணவியர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர்கள் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்தார். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கும் பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும், தோல்வியடைந்தவர்கள் விரைவில் துணை தேர்வுகளை எழுதி நடப்பாண்டே உயர்கல்விக்கு செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், 35 மதிப்பெண்கள் எடுத்தாலும் நம் பிள்ளைதான், 100 மதிப்பெண்கள் எடுத்தாலும் நம் பிள்ளைதான். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். எல்லா பிள்ளைகளும் நமது பிள்ளைகள்தான் எனவே பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும். ஜூன் மாதம் துணைத் தேர்வு நடைபெறும். தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களையும் துணை தேர்வில் பங்கேற்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
அரசு பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அவர்கள் படிப்பை தொடர ஏற்பாடு செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார். வட மாவட்டங்களின் கல்வித் தரத்தை முன்னேற்றுவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 80,000-க்கும் மேலான மாணவர்கள் அரசு பள்ளியில் தற்போது சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை, பெருமையின் அடையாளம் என்றார்.
10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி விகித வாரியாக கடைசி 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் எவை என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
ராணிப்பேட்டை 83.54%
நாகை 84.41%
கிருஷ்ணகிரி 85.36%
செங்கல்பட்டு 88.27%
தமிழ்நாட்டிலேயே ராணிப்பேட்டை மாவட்டம் 83.54 சதவீதம் பெற்றும் கடைசி இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)