TN Headlines Today: இன்றைய நாளில் என்னென்ன நடந்தது? சுடச்சுட முக்கியச் செய்திகள்.. ரவுண்ட் அப் இதோ!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை இங்கே காணலாம்.
TN Headlines Today:
- சாலை போக்குவரத்தை கண்காணிக்க புதிய திட்டம்..
சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில், போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, புதிய நடைமுறைகளை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.மேலும் வாசிக்க..
- "மதுவிலக்கு தொடர்பாக அதிமுக போராட தயார் என்றால் இணைந்து நாங்களும் போராட தயார்" - திருமாவளவன்
மதுவிலக்கு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராட தயார் என்றால் அவர்களுடன் இணைந்து நாங்களும் போராட தயார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மேலும் வாசிக்க..
- சென்னை புறநகர் ரயிலில் கழன்று பின்னால் சென்ற பெட்டிகள்.. பயணிகளுக்கு திக் திக்..! சைதாப்பேட்டையில் நடந்தது என்ன?
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரயில் சைதாப்பேட்டை அருகே திடீரென ரயிலின் பெட்டிகள் கழன்று தனியாக பின்னால் சென்றது. இதன் காரணமாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும் வாசிக்க..
- ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு மே 21-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 46-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சியினை 21.05.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் மற்றும் மதிவேந்தன் கலந்துகொண்டு 46-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சியினை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளனர். மேலும் வாசிக்க
- காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா
- வானிலை அறிக்கை