PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி அரசியல், வரலாறு குறித்து பேசியுள்ள பாட்காஸ்ட் பற்றிய விவரங்களை காணலாம்.

பிரதமர் நரேந்திர மோடி தனது இளமைக் காலம், அரசியல் பயணம், வாழ்வில் சந்தித்த சவால்கள் உள்ளிட்டல் பல்வேறு விசயங்கள் பற்றி நிகில் காமத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஜெரோதா (Zerodha) இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான ’ People by WTF’ பாட்காஸ்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவரது வாழ்க்கை, கல்வி, அரசியல், மன அழுத்தத்தை நிர்வகிப்பது, காந்தியிடம் இருந்த கற்றுக்கொண்டவை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்முறையாக பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்பது பதற்றமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
” நானும் மனிதன்தான்; கடவுள் இல்லை!”
அரசியல் பயணம் பற்றி பேசுகையில், பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஆற்றிய உரையில் குறிப்பிட்ட விசயங்கள் அவர் வாழ்வின் முக்கிய மந்திரமாக மாறிவிட்டதாக பதிலளித்துள்ளார். அவர் பேசுகையில்,” எந்த விசயமாக இருந்தாலும் கடினமாக உழைப்பேன். சுயநலமிக்க ஒருவனாக இருக்க மாட்டேன். தெரிந்தே தப்பு செய்வதை ஒருபோதும் பின்பற்ற மாட்டேன். இதுவே என் வாழ்க்கையின் மந்திரமாக மாறிவிட்டது. தவறுகள் தவிர்க்க முடியாதவை. நானும் கூட நிறைய தவறுகள் செய்திருக்கலாம், நானும் ஒருமனிதன்தான், கடவுள் அல்ல. இருந்தாலும், கெட்ட எண்ணங்களோ அல்லது தப்பு செய்ய வேண்டும் நோக்கமோ என்னுள் எழாமல் பார்த்துக்கொள்வேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியலுக்கு வர விரும்புபவர்களுக்கு நரேந்திர மோடி அளித்த அறிவுரை என்ன என்றால்..” அரசியல்வாதியாக இருப்பது அரசியலில் வெற்றி பெறுவது இரண்டும் வெவ்வேறானது. கடமையை உணர்ந்து செயல்படுதல், மக்களுக்காக களத்தில் இருப்பது, குழுவாக செயல்படுதன் முக்கியத்துவத்தை அறிந்திருந்த்தல், தேர்தலில் வெற்றி பெற்றாலும் அரசியல்வாதியாக வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகியவற்றை உணர்ந்திருக்க வேண்டும். நல்ல பேச்சாற்றல் இருக்க வேண்டும். நோக்கத்தை வெளிபடுத்த வேண்டும்.” அரசியல் பயணம் என்பது எளிதானதல்ல. தேர்தல் வெற்றி மட்டும் போதாது. தேர்தல் என்பது ஜனநாயக நடைமுறை. மக்களின் மனதில் இடம்பெற வேண்டும். மக்களுக்கு நன்மை அளிக்க கூடிய சரியானதை மட்டும் செய்ய வேண்டும். என்று தெரிவித்தார்.
சவால்களை எதிர்கொள்ள பழக வேண்டும்:
அவரது வாழ்க்கையில் சந்தித்த தோல்விகள், சவால்கள் பற்றி குறிப்பிடுகையில்,” தோல்விகளை கண்டு அஞ்சும் பழக்கம் எனக்கு இல்லை. ஒவ்வொரு நொடியிலும் ரிஸ்க் எடுத்து துணிச்சலுடன் செயல்பட வேண்டும்.” என்று தெரிவித்தார். குஜராத் மாநிலத்தின் எம்.எல்.ஏ. ஆக இருந்தபோது அமெரிக்க அரசு அவருக்கு விசா வழங்கவில்லை. 2005-ல் நடந்த இந்த நிகழ்வின்போது பிரதமர் மோடி ஒரு நாள் இந்தியா உலக அளவில் உயர்ந்து நிற்கும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார். போலவே, உலகமே வியக்கும் அளவிற்கு இந்தியா வளர்ந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

