Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Pongal Holidays For Puducherry: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ,ஜனவரி 16, 17 ஆகிய 2 நாட்களையும் விடுமுறை நாளாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் ஜனவரி 16, 17 ஆகிய இரண்டு நாட்களையும் விடுமுறை தினமாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மேலும், இதற்கு ஈடான நாட்களாக பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 8 ஆகிய இரண்டு நாட்களையும் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகப்பெரிய பண்டிகை பொங்கல் பண்டிகை ஒன்று. பொங்கல் பண்டிகையானது, தமிழர்களின் அடையாளமாக திகழ்கிறது. நடப்பாண்டிற்கான பொங்கல் பண்டிகையானது வரும் ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
இதையும் படிக்க: நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
தமிழ்நாட்டில் பொங்கல் விடுமுறை:
இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக ஜனவரி 17ம் தேதி ( வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக அரசு விடுமுறை அளிக்கப்படுதவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகையை, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவார்கள். வெளியூர்களில் வசிக்கும் நபர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
தொடர்ந்து விடுமுறை:
நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ம் தேதி பிறக்கிறது. 14ம் தேதி தைப்பொங்கல் ஆகும். 15ம் தேதி மாட்டுப்பொங்கல் ஆகும்.16ம் தேதி காணும் பொங்கல் ஆகும். செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை நாளில் வரும் இந்த 3 பண்டிகைகளும் அரசு விடுமுறை ஆகும்.
மக்கள் வசதிக்காகவும், வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் தங்கள் குடும்பத்துடன் போதிய நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசு ஜனவரி 17ம் தேதியையும் விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது.