(Source: ECI/ABP News/ABP Majha)
TN Headlines Today July 02: திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து... மேடவாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்...தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வுகள்
TN Headlines Today June 30: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
Thiruvannamalai Temple: பக்தர்களுக்கு நற்செய்தி..! திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு இனிமேல் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் “திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபத் திருநாளன்றும் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-sekar-babu-announced-thiruvannamalai-arunachaleswarar-temple-pournami-special-fare-darshan-cancelled-126440
Tomato Price Hike: விண்ணை முட்டும் தக்காளி விலை - அமைச்சர் நாளை முக்கிய ஆலோசனை! மக்கள் வேதனை தீருமா...?
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்கப்படுவதால் பொதும்மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்து குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-k-r-periyakaruppan-is-the-minister-of-co-operatives-chair-meeting-for-tomato-price-hike-126414
Weather Update : கடலூர், மயிலாடுதுறையில் மிக கன மழைக்கு வாய்ப்பாம்.. அப்போ! சென்னைக்கு.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
02.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-to-very-heavy-rain-is-likely-to-occur-at-one-or-two-places-over-mayiladuthurai-cuddalore-districts-126446
CM MK Stalin: தமிழ் அனைவரையும் வாழ வைக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழ் மொழி எப்போதும் அனைத்து மக்களையும் வாழ வைக்கும் என வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். வட அமெரிக்கா தமிழ் சங்கப் பேரவை மாநாட்டில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். ’யாதும் ஊரே; யாரும் கேளிர்’ என்ற கணியன் பூங்கொன்றனார் எழுதியதை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையை தொடங்கினார்.தொல்லியல் ஆய்வுகளை அரசு ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டிலேயே அதிகளவில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தமிழகத்திக்தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/mk-stalin-speech-federation-of-tamil-sangams-of-north-america-evemt-tamil-language-pride-126416
Chennai Traffic: மக்களே.. மேடவாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..! உஷாரா படிச்சிட்டு போங்க..!