TN Headlines Today: மதிமுகவில் இருந்து திருப்பூர் துரைசாமி விலகல்.. அண்ணாமலை மீது சிஎஸ்கே ரசிகர்கள் கோபம்..3 மணி செய்திகள் இதோ..!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- சி.எஸ்.கே. வெற்றி பெற்றதற்கு பா.ஜ.க.வே காரணம் - அண்ணாமலை சொன்ன காரணத்தை பாருங்க..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். 2023 இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதை ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,கடைசி வின்னிங் ரன் அடித்து சி.எஸ்.கே.வை வெற்றி பேற வைத்த ஜடேஜா ஒரு பா.ஜ.க. காரியகர்த்தா என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அதே தான் 2024 தேர்தலிலும் நடக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை பார்வையிட்ட முதலமைச்சர்..!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள NEC நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அங்கு பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன்,உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மேலும் படிக்க
- புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு - ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு
கடும் வெயில் காரணமாக ஜூன் 1ம் தேதிக்கு பதிலாக ஜூன் 7 ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி இந்த கல்வி ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறப்பு ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து 7 ஆம் தேதிக்கு சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- சம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்கிறீர்கள்..'நிருபர்களிடம் டென்ஷன் ஆன ப.சிதம்பரம்..!
செங்கோல் விவகாரத்தில் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது மட்டுமே உண்மையான வரலாறு. மற்றவை எல்லாம் புனையப்படுவது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அப்போது மூன்று மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ”சம்மந்தமே இல்லை...சம்மந்தமே இல்லாத கேள்விகள் கேட்கின்றனர்” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார். மேலும் படிக்க
- ம.தி.மு.க.வில் இருந்து முற்றிலுமாக விலகுகிறேன் - அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவிப்பு
ம.தி.மு.க.வில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அக்கட்சி அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.கட்சி தலைமையுடன் நிலவி வந்த மோதலுக்கு மத்தியில் திருப்பூர் துரைசாமி திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கட்சியில் இருந்து விலகும் முடிவை அவர் அறிவித்தார். மேலும் படிக்க