TN Headlines: 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு; ராமேஸ்வரம் சென்றடைந்த பிரதமர் மோடி - முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- DMK Youth Wing Conference: கோலாகலமாக தொடங்க உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு: இன்று சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு நாளை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேருரை ஆற்ற உள்ளார். மேலும் படிக்க
- Rain Alert: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு
20.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 21.01.2024: தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் படிக்க
- Arjun Sarja: பிரதமர் மோடியை பிடிக்கும் அவ்வளவு தான் .. பாஜகவில் எல்லாம் சேரல - நடிகர் அர்ஜூன் பேட்டி
பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா போட்டிகளை அவர் தொடங்கி வைத்தார். இதற்காக சென்னைக்கு விமானம் மூலம் வருகை தந்த அவர், சென்னை அடையாறு ஐஎன்எஸ் தளத்தில் இருந்து கார் மூலம் நேரு ஸ்டேடியம் வந்தார். அவருக்கு வழியெங்கும் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் படிக்க
- PM ModI Rameshwaram: ராமேஸ்வரத்தில் 22 தீர்த்தங்களில் நீராடும் பிரதமர் மோடி - கட்டுப்பாடுகளும் , திவிர பாதுகாப்பும்
தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். மேலும் படிக்க
- Parliament Election: ஜன.31தான் கெடு! தேர்தல் அலுவலர்களுக்கு வரும் பணியிடமாற்றம்: தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு!
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகள் முடுக்கிவிட்டுள்ளன. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் அறிக்கை, தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை என 3 குழுக்களை அமைத்து அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க