மேலும் அறிய

TN Rain Alert: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு மற்றும் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

07.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஈரோடு மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

08.11.2023 மற்றும் 09.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
 
11.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

12.11.2023 மற்றும் 13.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

பவானி (ஈரோடு) 12, சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி) தலா 12, ராஜபாளையம் (விருதுநகர்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 11, தொண்டி (ராமநாதபுரம்) 10, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), சிற்றாறு-I (கன்னியாகுமரி), ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி), மதுரை விமானநிலையம், பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), சின்னக்கல்லார்  (கோயம்புத்தூர்), திருமங்கலம் (மதுரை), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), கோவிலங்குளம் (விருதுநகர்) தலா 9, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), பாலக்கோடு (தர்மபுரி), KCS மில்-2 மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி), கவுந்தப்பாடி (ஈரோடு), திருச்செங்கோடு (நாமக்கல்), ஈரோடு PTO, கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), திருப்புவனம் (சிவகங்கை), கயத்தார் (தூத்துக்குடி), கோவில்பட்டி (தூத்துக்குடி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி) தலா 8, மாஞ்சோலை (திருநெல்வேலி), குமாரபாளையம் (நாமக்கல்), திருவாடானை (ராமநாதபுரம்), கடம்பூர் (தூத்துக்குடி), நாகப்பட்டினம், எட்டயபுரம் (தூத்துக்குடி), விருதுநகர், கள்ளக்குறிச்சி, க.பரமத்தி (கரூர்), மடத்துக்குளம் (திருப்பூர்) தலா  7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

அரபிக்கடல் பகுதிகள்:  

07.11.2023: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08.11.2023: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

09.11.2023: மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

10.11.2023 மற்றும் 11.11.2023: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு   அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Watch Video: அச்சச்சோ..! திருவிழாவில் மதம் பிடித்த யானை.. பக்தர்களை காலை பிடித்து தூக்கி வீசும் வீடியோ
Flyover : கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
கிளாம்பாக்கம் To செங்கல்பட்டு.. 15 நிமிஷம் தான் ட்ராவல்.. வருகிறது 6 வழி மேம்பாலச்சாலை..!
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
Champions Trophy 2025: கில் vs ஜெய்ஸ்வால்! ரோகித்துடன் களமிறங்க போவது யார்? சாம்பியன்ஸ் டிராபி 2025
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
ISRO Chairman: தமிழ்நாடே பெருமிதம் - இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம், யார் இவர்?
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? - உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்
Embed widget