ஐபிஎஸ் அதிகாரிகளை பந்தாடிய திமுக அரசு.. 5 பேர் இடமாற்றம்!
ஊர் காவல் படையின் டிஜிபி-ஆக பதவி வகித்து வந்த வன்னியபெருமாள், சென்னை ரயில்வேஸின் டிஜிபி-ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டிஜிபி ராஜீவ் குமார், டிஜிபி வன்னியபெருமாள், ஐஜி மல்லிகா, டிஐஜி அபிஷேக் தீக்சித், எஸ்பி முத்தமிழ் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
(பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பிரிவு) டிஜிபி-ஆக பதவி வகித்து வந்த ராஜீவ் குமார், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபி-ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊர் காவல் படையின் டிஜிபி-ஆக பதவி வகித்து வந்த வன்னியபெருமாள், சென்னை ரயில்வேஸின் டிஜிபி-ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகளை பந்தாடும் திமுக அரசு:
போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜி-ஆக உள்ள மல்லிகா, சென்னை மனித உரிமைகள் ஆணையத்தின் ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ரயில்வேஸின் டிஐஜி-ஆக உள்ள அபிஷேக் தீக்சித், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜி-ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்பி-ஆக உள்ள முத்தமிழ், குற்ற விசாரணை பிரிவு (CID) எஸ்பி-ஆக மாற்றப்பட்டுள்ளார். சமீப காலமாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், தேர்தலுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம், சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக வி. அன்பு நியமிக்கப்பட்டார்.
மதுரை துணை ஆணையர் பி.பாலாஜி, காவலர் நலத்துறை ஏ.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டார். சென்னையில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பாளராக எஸ். வனிதா நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து,
கடந்த ஆகஸ்ட் மாதம், மாநிலம் முழுவதும் 24 காவல்துறை உயர் அதிகாரிகளை இடமாற்றும் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், திருவல்லிகேணி துணை ஆணையர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நிஷா பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.