TN Weather Update : தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; எந்த மாவட்டங்கள் தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
weather report: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி:
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் இன்று, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu, Heavy rain :19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:
இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Five days forecast for Tamilnadu, Puducherry & Karaikal pic.twitter.com/hvCiIH5Nti
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 21, 2022
23 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு:
இந்நிலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர்,அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 23 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/T8L6cWLhDO
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 21, 2022
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 21, 2022
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்,அதிகபட்சமாக மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் 12 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
24 மணி நேரத்தில் பதிவான மழையளவு [மி. மீ] pic.twitter.com/zlhX7I5QI3
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 21, 2022
Viral Video: மழை வெள்ளத்தில் பாதி மூழ்கிய பள்ளி வாகனம்.. ஹீரோக்களாக மாறிய மக்கள்.. வைரல் வீடியோ
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்