Tamilnadu RoundUp: மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்.. இபிஎஸ் சுற்றுப்பயணம் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி, கல்லூரிகள் விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்குவதற்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்று முதல் தொடக்கம்
சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் சுற்றுப்பயணத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்குகிறார் - மேட்டுப்பாளையத்தில் இன்று ரோட் ஷோ
தமிழ்நாட்டில் இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு; 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று தொடக்கம்
தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுவில் நீர்வரத்து விநாடிக்கு 57 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு - ஒகேனக்கல் அருவியில் குளிக்க மற்றும் பரிசல்கள் இயக்கத் தடை
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 58 ஆயிரம் கனடியாக அதிகரிப்பு; அணைக்கு வரும் நீர் அப்படியே உபரி நீராக திறப்பு
திருப்பூரில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் ரிதன்யா தற்கொலை; ரிதன்யா குடும்பத்தினர் ஜாமின்கோரிய மனு மீது இன்று விசாரணை
தேர்தல்களில் நடிகர்கள் வெற்றி பெறுவது சந்தேகமே; தேர்தல் திமுக - அதிமுக இடையேயான இருதுருவ போட்டி - திருமாவளவன்
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்; ஜவாஹிருல்லா வேண்டுகோள்
2026ம் ஆண்டுக்குள் நாடாளுமன்றத்தில் வ.உ.சி,க்கு சிலை நிறுவப்படும் - நயினார் நாகேந்திரன்
அஜித்குமார் மரணம்; காவல்துறை சித்தரவதைகளை தடுக்க சிறப்பு சட்டம் தேவை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அரசு அங்கீகரிக்காத இடங்களில் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுரை
காவல்துறையின் அதிரடி கட்டுப்பாடுகளால் திருநெல்வேலியில் சாலை விபத்து மரணங்கள் 19 சதவீதமாக குறைவு
பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக அதிகரிக்க வேண்டும்; ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை செங்கம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற நபர்களை கட்டி வைத்த பொதுமக்கள்
புதுச்சேரியில் ஆபரேஷன் திரிசூலம்; ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது





















